செம்பவழம் நீதானே
பூவாசம் நான்தானே
போகும் வழியெங்கும்
மகாராணிக்கு வாசங்கள்
கொட்டி வைக்கும்
என் காதல் கண்மணியே
கள்ளிருக்கும் ரோசாவே
வண்ண பூஞ்சோலை நீதானே
வாடைகாத்தும் நான்தானே
உன்னை வட்டமிட்டு
செல்லம் கொஞ்சும்
என் காதல் செல்லம்மாவே
உன் முகம் நெஞ்சில் நிறைத்து
நெஞ்சுக்குள்ளே ஆசை வைத்து
ஆசைகளில் ஊஞ்சல் கட்டி
ராசாத்தி நீ ஆட
ராப்பகலா பார்த்திருக்கும்
என் காதல் கதையெல்லாம்
கட்டுமரம் போலாச்சு
கட்டவிழ்ந்து போயாச்சு
கண்ணீரில் மிதக்குது
கரை அது காணவில்லை
தேடிப்பார்க்கவும் மனசில்லை.
...........................................................
எது காதல்? -அத்தியாயம் 2
4 years ago
8 comments:
me the 1st..
என் காதல் கதையெல்லாம்
கட்டுமரம் போலாச்சு
கட்டவிழ்ந்து போயாச்சு
கண்ணீரில் மிதக்குது
கரை அது காணவில்லை
தேடிப்பார்க்கவும் மனசில்லை//
alagana varigal naan migavum rasithen..!
வரிகள் அருமை
நல்லா வந்திருக்குங்க கவிதை
touching lines logu
hey super pa
தேடல் தான் பல தெரிவுகளை தரும் அதலால் தேடுங்கள் செல்லம்மானு எத்தனை அழகா சொல்லி ....உங்க கவிதை சுகம்
Ellorukkum Nanringa.
முழுசாப் படிச்சேன்.. எல்லாக் காதல் கவிதைகளுமே அருமை.. வலியிலும் ஒரு சுகம் உண்டு இல்லையா? நல்லா இருக்குங்க.. தொடருங்க..
Post a Comment