Apr 25, 2009

என் காதல் செல்லம்மா..

செம்பவழம் நீதானே
பூவாசம் நான்தானே
போகும் வழியெங்கும்
மகாராணிக்கு வாசங்கள்
கொட்டி வைக்கும்
என் காதல் கண்மணியே
கள்ளிருக்கும் ரோசாவே
வண்ண பூஞ்சோலை நீதானே
வாடைகாத்தும் நான்தானே
உன்னை வட்டமிட்டு
செல்லம் கொஞ்சும்
என் காதல் செல்லம்மாவே
உன் முகம் நெஞ்சில் நிறைத்து
நெஞ்சுக்குள்ளே ஆசை வைத்து
ஆசைகளில் ஊஞ்சல் கட்டி
ராசாத்தி நீ ஆட
ராப்பகலா பார்த்திருக்கும்
என் காதல் கதையெல்லாம்
கட்டுமரம் போலாச்சு
கட்டவிழ்ந்து போயாச்சு
கண்ணீரில் மிதக்குது
கரை அது காணவில்லை
தேடிப்பார்க்கவும் மனசில்லை.
...........................................................

Apr 22, 2009

மறவாதே கண்மணியே..

கனவினில் பார்த்தேன்
காணவில்லை வேர்த்தேன்..
இரவுகள் கூட
கானலாய் ஆனதடி பெண்ணே..
நிஜங்களை மறந்து
நினைவுகளில் தொலைந்தேன்..
நிகழ்வுகள் மறந்து
சுயங்கள் தொலைக்கிறேன் அன்பே..
என் விடியல்களை எல்லாம்
கோடி சூரியன்களை கொண்டு
பிரகாசிக்க செய்தாய்..
உன் காலை வணக்கங்களால்..
என் இரவுகளை எல்லாம்
ஒரு நூறு நிலவுகளை கொண்டு
அழகுற செய்தாய்
உன் இரவு வணக்கங்களால்..
இன்னொரு தாயாய்
நெஞ்சினில் நிறைந்தாய்..
பெண்ணொரு தேவதை
மனதோடு உணர்த்தினாய் ..
காயங்கள் மட்டும் ஏனோ
தந்தாய் அன்பே..
என்கவிதை கூட
கலங்குது பெண்ணே..
காயங்கள் மட்டுமே
தந்தாலும்..
கண்ணீரில் எனை
நனைய வைத்தாலும்
என் காலங்கள் உள்ள
காலம்வரை
என் நெஞ்சம் உன்னை
மறவாதே கண்மணியே.
....................................................

Apr 12, 2009

தெரிந்தால் நீயாவது சொல்லடி பெண்ணே..

அழகான நிலவு
துணையாய் இருந்தும்
அமிலம் ஊற்றியதை போல்
எரியும் என் இரவுகளை
என்ன செய்து கழிப்பதென்று
தெரியவில்லை எனக்கு.

ஆறறிவு இருந்தும்
சுற்றி நடப்பவற்றை
அறிய இயலாத ஜடமாய்
மாறிப்போன என் சிந்தனைகளை
என்ன செய்து மீட்பதென்று
புரியவில்லை எனக்கு.

ஏந்திக்கொள்ள எல்லாம் இருந்தும்
ஏதுமில்லாத வெறுமையாய்
மாறிப்போன வாழ்க்கையை
எதைக்கொண்டு நிறைப்பதென்று
இன்னும் விளங்கவில்லை எனக்கு.

இதுவரை பிரியங்களை மட்டுமே
சுமந்த என் காதல் முதன் முறை
பிரிவுகளை முழுமையாய்
தாங்கும் சக்தியற்று தவிக்கிறது..
எதை சொல்லி தேற்றுவதென்று
தெரியவே இல்லை எனக்கு..

நான் கல்லறைக்கு போகும்முன்
நீயே ஒருமுறையாவது சொல்லிவிடு ..
என் காதல் கல்லறையிலாவது
நிம்மதியாக உறங்கட்டும்..
...............................................................

Apr 10, 2009

திசை மாறும் பறவை..

உப்பை தின்றவன்
தண்ணீர் குடிக்க வேண்டும்..
காதலை அறிந்தவன்
கண்ணீர் விட வேண்டும்..
இன்னும் எழுதப்படாத
விதிகளிங்கே எத்தனையோ..

நேசம் வைத்து
நிறைந்த மனது
காயம்பட்டு
தவிக்குது இங்கே..
காதல் வைத்து
கரைந்த உயிர்
கண்ணீர் விட்டு
கலங்குது இங்கே..

சிகரம் தொடும்
வாழ்க்கை..
இங்கே சிறகுகள்
முறிந்து கிடப்பது
யாருக்கு தெரியும்..

வானம் தொட்டுவிடும்
வயசு..
இங்கே வழி தெரியாமல்
தடுமாறிக்கொண்டிருப்பது
எத்தனை பேருக்கு தெரியும்..

சிறகடித்து பறக்கும்
மனசு..
இன்று கிணற்று தவளையாய்
ஒடுங்கி கிடப்பது
அந்த கடவுளுக்கு கூட
தெரிய வாய்ப்பில்லைதான்..

ஒன்றாய் பயணிக்கும்
இதயங்களிரண்டு
தனித்தனியாய்
போகும் தருணங்கள் மிக
கொடூரமானவைதான்..
கண்சிமிட்டும்
ஜோடிபுறாக்களின் பயணம்
காற்றின் அலைக்கழிப்பால்
ரத்தாகும் தருணங்களை போல.
........................................................

Apr 7, 2009

கா - த - ல - க - ரா - தி

என் சிறு வயது
பண்டிகை காலங்களையெல்லாம்
என் கண்முன்னே
நிழலாட வைக்க
உன் சிறு புன்னகையால்
மட்டுமே முடிகிறது.
...................................................
எனக்கான எல்லா
கடவுள்களும்
சேர்ந்துதான் உன்னை
படைத்திருக்க வேண்டும்.
அதனால்தான்
நான் கேட்க்காமலேயே
உன் ப்ரியங்களைஎல்லாம்
வரங்களாக்கி
தருகிறாய் எனக்கு.
.............................................................
நான் எது
கேட்டாலும் 'சீ.. போடா'வென்று
வித விதமாய் வெட்கங்கள்
காட்டுகிறாய் நீ.
எனக்கு பெரும்
அதிசயமாகவே இருக்கிறது.
ஒரு பூவுக்கு இத்தனை
விதமாய் வெட்க்கப்பட
தெரியுமா என்று.
..........................................................
இனிமேல் நான்
எங்கேனும் வெளியே
செல்லும்போது
வழியனுப்புகிறேன்
என வாசல் வரதே நீ.
உன்னை பார்த்துவிட்டால்
நின்ற இடத்திலிருந்து
நகர மறுத்து
அடம்பிடிக்கிறது என் காதல்.
...................................................
என் முழங்கையில்
உன் தாவணிக்காத்தாடி
படர நடந்து சென்ற
அந்த இரண்டு நிமிட
பயணம் போல
சுகமான பயணம்
இதுவரை இருந்ததே
இல்லை எனக்கு.
......................................................
ப் ரி ய மு ட ன் . .
லோ க நா த ன் . .

Apr 1, 2009

ஒரு நட்சத்திரத்திற்கு
ஒரு முறை என
கணக்கு வைத்துக்கொண்டு
ஒவ்வொரு நட்சத்திரமாக
எண்ணிக்கொண்டிருக்கிறேன்..
உன்னை எத்தனை முறை
நினைத்திருப்பேன் என
நினைத்துக்கொண்டு.
........................................................
ஏதுமற்ற அனாதையாய்
தெருவில் கிடக்கிறது
என் காதல்..
பார்த்துக்கொண்டே
தாண்டி செல்கிறாய் நீ.
வலிக்கிறது மனசு..
காதல் தெருவில்
கிடைப்பதற்காக அல்ல..
நீ பார்த்துக்கொண்டே
தாண்டிசெல்வதை பார்த்து.
..............................................................
எண்ணி பார்த்தால்
மரணத்தை விட சிறந்தது
வேறெதுவும் இருப்பதாக
தோன்றவில்லை எனக்கு..
.....................................................
எதையோ எதிர்பார்த்து
செல்லும் பயணங்களில்..
எதிரே வரும் பேருந்தின்
அலைகளிப்பால் எதிர்பாராமல்
நம் கண்ணில் விழுந்துவிடும்
ஒரு சின்ன தூசியை போல்தான் நீயும்..
என் மனதில் விழுந்து விட்டாய்..
என்ன செய்தும் கரைக்கவோ..
எடுக்கவோ முடியவில்லை..
என்னிலிருந்து உன்னை..
.............................................................
ப் ரி ய மு ட ன் ..
லோ க நா த ன் . .