Apr 12, 2009

தெரிந்தால் நீயாவது சொல்லடி பெண்ணே..

அழகான நிலவு
துணையாய் இருந்தும்
அமிலம் ஊற்றியதை போல்
எரியும் என் இரவுகளை
என்ன செய்து கழிப்பதென்று
தெரியவில்லை எனக்கு.

ஆறறிவு இருந்தும்
சுற்றி நடப்பவற்றை
அறிய இயலாத ஜடமாய்
மாறிப்போன என் சிந்தனைகளை
என்ன செய்து மீட்பதென்று
புரியவில்லை எனக்கு.

ஏந்திக்கொள்ள எல்லாம் இருந்தும்
ஏதுமில்லாத வெறுமையாய்
மாறிப்போன வாழ்க்கையை
எதைக்கொண்டு நிறைப்பதென்று
இன்னும் விளங்கவில்லை எனக்கு.

இதுவரை பிரியங்களை மட்டுமே
சுமந்த என் காதல் முதன் முறை
பிரிவுகளை முழுமையாய்
தாங்கும் சக்தியற்று தவிக்கிறது..
எதை சொல்லி தேற்றுவதென்று
தெரியவே இல்லை எனக்கு..

நான் கல்லறைக்கு போகும்முன்
நீயே ஒருமுறையாவது சொல்லிவிடு ..
என் காதல் கல்லறையிலாவது
நிம்மதியாக உறங்கட்டும்..
...............................................................

11 comments:

வியா (Viyaa) said...

nice poems..

வியா (Viyaa) said...

இதுவரை பிரியங்களை மட்டுமே
சுமந்த என் காதல் முதன் முறை
பிரிவுகளை முழுமையாய்
தாங்கும் சக்தியற்று தவிக்கிறது..
எதை சொல்லி தேற்றுவதென்று
தெரியவே இல்லை எனக்கு..

alagana varigal..
i like it

நட்புடன் ஜமால் said...

பிரிவு என்பது அவ்வளவு எளிதான விடயமல்ல

இருப்பினும் ...


ஏதோ சந்தர்பங்களில் அது நிகழ்ந்தே விடுகிறது

அதற்காக கல்லறை தேடிச்செல்ல வேண்டுமென்றால்

உலகில் அடும்மாடி கட்டிங்களில் உயிர்கல் இருக்காது

ஏனெனில் அவைகள் கல்லறைகளாகவே இருக்கும் ...

அப்துல்மாலிக் said...

மீண்டும் ஒரு பிரிவின் தேடல் உங்கள் வரிகளில்

அப்துல்மாலிக் said...

//உலகில் அடும்மாடி கட்டிங்களில் உயிர்கல் இருக்காது

ஏனெனில் அவைகள் கல்லறைகளாகவே இருக்கும் ...//

வழிமொழிகிறேன்

அ.மு.செய்யது said...

வலி புரிகிறது.

அதற்காக எல்லோரும் கல்லறை தேட வேண்டிய அவசியமில்லை.

gayathri said...

இதுவரை பிரியங்களை மட்டுமே
சுமந்த என் காதல் முதன் முறை
பிரிவுகளை முழுமையாய்
தாங்கும் சக்தியற்று தவிக்கிறது..
எதை சொல்லி தேற்றுவதென்று
தெரியவே இல்லை எனக்கு..

enakuum than

logu.. said...

Nan Chummmmaaaa eluthi pathenga..
Thanks for all frnds..

Anonymous said...

தெரியாமல் வருவது தான் காதல் நம்மை அறியாமல் செய்வதும் தான் காதல் தன்னிலை மறக்கச்செய்யும் காதல் நம்மை தானியங்கியாக்கிவிடும் காதல் கண்ணிர் விடவைக்கும் காதல் நம் செந்நீர் பருகிவிடும் காதல் கனிவை தரும் காதல் நம்மில் பணிவை தரும் காதல் கோவம் கொல்லும் காதல் நம்மை கோவிலாக்கிவிடும் காதல் அன்பை சொல்லும் காதல் நல் பண்பையும் சொல்லும் காதல் உன் சொல் அதை தாங்காது காதல் கல்லறை விரும்பாது காதல்..வில்லத்தனமானதது தான் காதல் ஆனால் உயிரை விலையாய் கேட்காது காதல்!!!!!!கவிதை அழகு கல்லறை வார்த்தை வராது இருந்த்தால் மிக்க அழகோ அழகு....

logu.. said...

Nanringa
Tamil..... arasi..

kavitha said...

அமிலம் ஊற்றியதை போல்
எரியும் என் இரவுகளை
என்ன செய்து கழிப்பதென்று
தெரியவில்லை
ஏந்திக்கொள்ள எல்லாம் இருந்தும்
ஏதுமில்லாத வெறுமையாய்
மாறிப்போன வாழ்க்கையை
எதைக்கொண்டு நிறைப்பதென்று...

பிரியங்களை மட்டுமே
சுமந்த என் காதல் முதன் முறை
பிரிவுகளை முழுமையாய்
தாங்கும் சக்தியற்று தவிக்கிறது..


mmm...purunjukka mudethu logu