Dec 27, 2010

எனக்கான ஒரு மனம்.


எதேச்சையாய் கரம் பற்றி இழுக்கும்போது
எதிர்பாராமல் உடைந்த கைவளையை பார்த்து
"ப்ச்..போச்சே.." என்றதற்கு..
"விடு..விடு..
சேலைன்னா கசங்கணும்
வளையல்னா உடையணும் "
என்று சொல்லி சத்தமில்லாமல்
உடைக்க ஆரம்பிக்கிறாய் என் வயதை.
******************************************
தென்றல் கூட வழக்கத்திற்கு மாறாய்
கோக்குமாக்காக வீசுகிறது..
உன் முந்தானை வாசம் திருடிய கிறக்கத்தில்.
எப்போதும் உன் வாசம் மட்டுமே பற்றிகொள்ளும்
என் காதல் மட்டும் சும்மாவா இருக்கும்?
**************************************
எதேச்சையாய் ஆற்றங்கரையோரம் வந்த
உன்னை பார்த்து இரு மீன்கள் பேசிக்கொண்டன.
" அட.. நம் இனம் தண்ணீருக்கு வெளியேயும்
வாழ முடிகிறதே.."
கேட்டதும் நான் மெல்ல புன்னகைத்தேன்.
நீ கொஞ்சமே கொஞ்சமாய் வெட்கப்பட்டாய்.
என் புன்னகையால் எதுவும் நிகழவில்லை.
ஆனால் உன் வெட்கத்தால் மெல்லமாய்
சிவக்க ஆரம்பித்தது அந்தி வானம்.
********************************************
"எல்லோருக்கும் ஒரு மனம்
எனக்கென்று ஒரு மனமும் வைத்திருப்பதில்
தவறில்லைதான்..
ஆனால் அதை என் சொல்பேச்சு
கேட்க விட்டால் குறைந்தா போய்விடுவாய் ?"
"ஐ.. அஸ்கு புஸ்கு.."
பழிப்பு காட்டிக்கொண்டே ஓட ஆரம்பித்தாய்.
ஹய்யோ.. இன்னும் கொஞ்ச நேரமேனும்
இங்கேயே இரேன்..
எனக்கான அந்த மனம் உன் வெட்க்கத்திடமோ
அல்லது அது சார்ந்த எதோ ஒன்றிடம்
மன்றாடிகொண்டிருப்பதாய் படுகிறது எனக்கு.
...........................................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.


Dec 20, 2010

அழகிற்கெல்லாம் அழகு..

ஒருமுறை வெட்கப்பட்டு காட்டு
என சொன்னால் முறைக்கிறாய்..
ம்ம்.. ஒரு முறை கொஞ்சமே கொஞ்சமாய்
கோபப்பட்டு காட்டேன் என்றால்
சீய்.. போடாவென வெட்கப்படுகிறாய்..
கிறுக்கியாடி நீ?
**************************************
ஹய்யோ.. பகலிலேயே இப்படி
பொறுக்கித்தனம் செய்கிறாயே
இரவில் என்னவெல்லாம் செய்வாய் என
கன்றிப்போன உதடுகளை ஈரம்
செய்துகொண்டே முறைக்கிறாய்..
நான் வேறெதுவும் செய்யபோவதில்லை..
விடியாத இரவுகள் மட்டும் செய்து
வைத்துக்கொள்வேன் அவ்வளவுதான்.
***********************************
என்னதான் ஆடைகள் அணிந்து
ஒய்யாரமாக வந்தாலும்
அழகாக மட்டும்தான் தெரிகிறாய்.
ஒரு முறை என் காதலையும்
சூடிக்கொண்டு வந்துதான் பாரேன்
அழகிற்கெல்லாம் அழகு
பேரழகாய் தெரிவாய்.
*************************************
அழகு செய்கிறேனென நீ வைக்கும்
நெற்றிபொட்டு கூட உன்னைக்கொண்டு
தன்னை அழகு செய்துகொள்வதை போல
உன் மனதோடு வாழ்ந்து தன்பிறவி
பயனை அடைய நினைக்கிறது என் காதல்.
****************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Dec 16, 2010

நட்பூபூபூ.. பூ... பூ ..

கடந்த சனிகிழமை . நேரம் நாலு மணி
நாம்பாட்டுக்கு சிவனேன்னு ஆபீஸ்ல உக்காந்து வேலைய பாத்துட்டு இருந்தேன்.( என்ன வேலைன்னு கேக்காதீங்க நானே சொல்லிடறேன். வேறென்ன பண்ணுவம்? மொக்கைதான்.)

"பூங்காத்தே பூங்காத்தே போனவள பூங்குயில பாத்தியா..
தாங்காம தவிச்சேனே சின்னவள.."
ஆஹா..எவனோ ஆரம்பிசுடானேனு பயந்துட்டே செல்ல எடுத்து பாக்க நம்ம பங்காளி பயபுள்ளை..
" ஹலோவ்.."
" ஹலோவ்.."
"ஹலோவ்.."
"ஹலோவ்..'
"இங்கிட்டு லோகுங்க ..அங்கிட்டு..?"
" டேய்..வெளக்கெண்ணை.. நாந்தாண்ட பேசுறேன்.."
"தெரிது..தெரிது.. சொல்லு பங்கு.."
"எங்கேடா இருக்க?"
"எங்க இருக்கணும்?"
" சொர்கத்துல இருக்கோணும்..போறியாடா.. மாலை வாங்கிட்டு வரேன்.. கேக்குறான் பாரு கேள்வி.."
"ஆபீஸ் தான்.."
"அதானே பார்த்தேன் .. கழுதை கேட்ட குட்டிசெவுறு.."
(நம்ம வேலைக்கு போறத என்னமா நெனசுட்ட்ருகானுங்க..க்க்ராதகர்கள்..)
" என்னடா சொல்லி தொலை.."
"ஒரு ஆறு மணிக்கெல்லாம் பஸ் ஸ்டாப் வாடா.."
"டேய்.. எனக்கு ஆபீஸ் ஏழு மணிக்கு.."
"எல்லாம் தெரியும் ..வந்து சேருடா.. ரொம்ப முக்கியம்.. பஸ் ஸ்டாப்ல வெயிட் பண்றோம்.."
மறு வார்த்தை பேசும் முன் இணைப்பு கட்.

பண்றோமா? அப்டீன்ன என்னவாக இருக்கும்? யோசித்துகொண்டிருக்கும்போதே அவன் சொன்ன அதே கழுதை கெட்ட குட்டிசெவுறு ஞாபகம் வந்தது. ம்ம்..அப்போ அதுக்குதான் கூப்ட்ட்ருபானுங்கலோ..
போய்தான் பார்ப்போமே. சரியாக ஐந்து ஐம்பதுக்கு பஸ் ஸ்டாப்பில் இறங்க..
" எண்டா.. இதன் வர டைமா? கல்யாணத்துக்கு வர சொன்னா புள்ள பொறந்ததுகப்ரம்தான் வருவியாட..?"
( என்னா ஒரு உதாரணம் )
" டேய்..சொன்ன டைமுக்கு முன்னாடியே வந்தாச்சு.இதுக்கு மேல பேசின கொரவளைய கடிச்சு துப்பிடுவேன்.. ஜாக்ரதை.."
" சரி..சரி.. வாடா போலாம்.."
"எங்கேனு சொல்லவே இல்லியேட.."
" அது ஒண்ணுமில்ல பங்கு.. எனக்கு பொண்ணு பாத்துட்டாங்க.. நாளைக்கு பேசி முடிக்க வரசொல்லிட்டாங்க.. அதுக்குதான் ட்ரீட் வைடா எனக்கு.."
( இது எப்பருந்து ஆரம்பிச்சங்கனு தெரிலையே..ஆண்டவா..)
"டேய்..கல்யாணம் உனக்கு.. ட்ரீட் நானடா.. அதெல்லாம் இங்க நடக்காது ராசா.."
"டேய்.. பங்கு.. நாமல்லாம் அப்டியா பழகுனோம்..?"
( அஹா..ஒரே வார்த்தைல ஆப் பண்ண கத்து வச்சிருக்கானுங்களே..)
" சரி.. வாடா.. பொய் தொலையலாம்.. ஆனா வீட்டுக்கு போயிடுதான் வருவேன்.. காணோம்னு தேடுவாங்கடா.."
" அதெல்லாம் எங்களுக்கு தெரியும்.. பேக்க குடு இங்கியே கடைல வச்சுட்டு போலாம்.."
.
.
.
" டேய்.. உனக்கு ஒரு பீர் போதும்தானேடா.."
" இல்லடா.. நீ வாங்குரதுலையே எனக்கும் சேத்து வங்கிக்கோ.."
எதோ சொல்ல கூடாததை சொன்ன மாதிரி என்ன மேலும் கீழும் பாத்துட்டு.. சரிடா என்றான்.
" எங்க போலாம்டா?"
"எங்கும் வேணாம் இங்கயே பாத்துட்டு.. சாப்டு போய்டலாம்ட.. இனி வீட்டுக்கு போய் சாப்ட முடியாது."
"சரி வாட.."

உள்ளே போகவும்.. அங்கே ராஜ வரவேற்ப்பு அவனுக்கு. எங்கல்லாம் பழக்கம் புடிச்சு வச்சிருக்கானுங்க.
ஒரு அரை மணி நேரம் கழிச்சு..
"டேய்.. பங்கு.."
"என்னடா வெளக்கெண்ணை..?"
"இன்னும் ஒரு ரவுண்டு..."
"சொல்லுடா பங்கு.. கடையே நம்மோடதுதாண்டி.."
அங்கேயே ஆரம்பித்தது சனியன்.
" ஹலோ அண்ணா.. நா சிகரெட் கேட்டு ஒரு மணி நேரமாச்சு.. இன்னுமா கொண்டு வர?"
( இவன் எப்ப கேட்டான் நமக்கு தெரியாம)
" என்னப்பா நீ கேக்கவே இல்லல்ல?" இது கடைக்காரர்.
"அதான் இப்போ கேக்குரமுள்ள..போ..பொய் கொண்டு வா.."
"டேய்..பங்கு.."
"ஆஹா.. பசிக்குதுடா.. வா போலாம்.."
.
.
.
" வாங்கப்பா.. எங்க இப்போல்லாம் கடை பக்கமே காணோம்.."
"யோவ்.. எங்கள பாத்தா உனக்கு அப்பன் மாதிரி தெரிதா.."
"அட அதுக்கில்லப்பா.."
"அதான் வந்துட்டமுள்ள.. இலைய போடறது.."
"சரி உக்காருங்க.."
"என்ன சாப்ட்றீங்க?"
"அதெல்லாம் நாங்க சொல்லிகறோம்.. நீங்க பொய் கல்லா பொட்டிய பாருங்க.. எவனாச்சும் அமுக்கிர போறான்.. மச்டர்ர்.. ரெண்டு செட்டு தோசை.."
.
.
"யோவ்.. மாஸ்டர்.. நா ஒரு அம்லேட்தனே கேட்டேன்.. உன்ன யாரு ரெண்டு வெக்க சொன்னா?"
"டேய்..பங்கு.. ஒன்னுதண்ட இருக்கு.. கம்னு கொட்டி தொலை.."
மணி பார்க்க ஒன்பது ஆகியிருந்தது.
" டேய் பங்கு போலாம்டா.."
"ம்ம்.. வண்டிய எடுத்துட்டு வா.. போலாம்.."
" அந்த பேச்சுக்கே எடமில்ல.. என்னால ஓட்ட முடியாதுட.."
" என்னாலும் முடியாதுடா பங்கு.."
ஒரு பத்து நிமிட அலசலுக்கு பின் ஒரு முடிவுக்கு வந்தான்.
" விட்றா.. எல்லாம் எங்க அப்பன் வீடு ரோட்தானே.. வா போவோம்.."
ஹய்யோ.. அம்லேட்டே ரெண்டா தெரிஞ்சதே இவனுக்கு.. ரோடு நாலா தெரியுமே.. மறுபடியும் ஆலோசனையில் வரிந்து கட்டிக்கொண்டு இறங்கினோம். கடைசியில் ஒரு ஜென்டில் அக்ரீமென்ட்.
வண்டியை ஸ்டாண்டில் போட்டுவிட்டு இருவரும் பஸ் ஏறி போவதென்று. அங்கே பஸ் ஸ்டாப்பில் இறங்கி வீட்டுக்கு நடந்து போவதென்று ஒருமானதாய் தீர்மானம். எப்டியோ பஸ் ஏறி நம்ம ஊர் பஸ் ஸ்டாப்பில் இறங்கியாச்சு. இனி ரெண்டு கிலோ மீட்டர் நடக்கணுமே..
" டே..பங்கு.. ரீ சார்ஜ் பண்ணலாம்டா.."
"வந்து தொலை.."
" அக்கா.. ஏர்செல் நூறு ரூபா கார்டு இருக்கா?"
"இருக்குப்பா.."
"அப்போ எனக்கு ஒரு பத்து ரூபாய்க்கு ஈ சி பண்ணிவிடுங்க.."
(டேய்..அக்கா அடிசிற போறாங்கடா)
"நம்பர் சொல்லுப்பா.."
"நோ டெல்லிங்.. ஒன்லி மிஸ்டு கால்.."
ரீ சார்ஜ் பண்ணிக்கொண்டு நடராஜா சர்வீசை தொடங்கினோம். வழியில் பண்ணாத அலப்பறை இல்லீங்க. சொன்ன உங்க காதுல ரத்தம் வந்துடும். இந்த குளுருல ராத்திரி பதினோரு மணிக்கு கெணத்துல குதிச்சு குளிச்ச புண்ணியமெல்லாம் கெடச்சது எனக்கு. ஒருவழியா வீட்டுக்கு வந்து படுக்கும் போது தோனுச்சு..
இனிமேல் இந்த பொழப்பு ஆகாது.
மறு நாள் காலைலயே கெளம்பியாச்சு.. பிரண்ட் வீட்டுக்கு போறேன்னு.. ( பின்ன .. இருந்தா ஆயிரத்தெட்டு கிராஸ் கொஸ்டியன்ஸ் வரும்.. சமாளிக்க தெம்பில்ல... அதன் இந்த பொழப்பு.)
மணி மதியம் ரெண்டு இருக்கும்..
"பூங்காத்தே பூங்காத்தே போனவள பூங்குயில பாத்தியா..
தாங்காம தவிச்சேனே சின்னவள.."
எடுத்து பாத்தா பங்காளி பயல்.
" டேய்..பங்கு.. எங்க இருக்க.."
" பிரண்ட் வீட்லதா.. ஏன்டா?"
" ஒண்ணுமில்ல.. உங்கம்மாவுக்கு ஒடம்பு சரியில்லேடா.."
"ஐயோ.. ஒரு அரை மணி நேரத்துல வந்துடறேண்ட.."
" வேண்டாம்டா.. நா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிடு ஊசி போட்டுட்டு வந்தாச்சு.. மாத்திரை வாங்கிருக்கு .. வந்தவுடன் பாத்து குடுத்துடு.. ஒ.கே வ?"
"சரிடா.. வச்சிரு.. நா வந்திடுவேன் அரை மணி நேரத்துல.."

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்கள்தான்னு சொல்லுவாங்க. அப்டியேதாங்க.. கெட்டு குட்டிசுவர் ஆனாலும்.. ஆக்குனாலும்.. நண்பன் நண்பன்தாங்க.
-------------------------------------------------------------------------------------------------------
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Dec 14, 2010

ஹய்யோ..வெட்கம்.

நீ அணிந்திருக்கும்வரைதான் என்றில்லாமல்
களைந்தெறிந்த பின்பும் உன் வெட்கங்களை
பூசிக்கொண்டு ஜொலிக்கும்
உன் உடைகளை போல்தான்..
நீ முத்தமிட்டு சென்றபின்பும்
அந்த சுவடுகளினூடே நின்றுகொண்டு
திரும்ப வரமாட்டேனென்று
அழிச்சாட்டியம் செய்கிறது மனசும்.
*********************************************
எப்போதெல்லாம் உன்னோடு
பேசிக்கொண்டிருக்கிறேனோ அப்போதெல்லாம்
என் நேரங்கள் போவதே தெரிவதில்லை என்கிறாய்.
அடி பாவி.. நானா உன் நேரங்களை
திருடுகிறேன்.. அந்த வேலையை
உன் வெட்கங்கள்தனே செய்கின்றன என்றதற்கு..
அதற்கும் காரணம் நீதானே என்கிறாய்
வெட்கப்பட்டுக்கொண்டே.
**********************************************
" இந்த மருதாணியை பாரேண்டா..
எவ்வளவு அழகாய் சிவந்திருக்கு..
இப்டி சிவந்து நா பாத்ததே இல்லடா.."
" ம்ம்.. நல்லாதானிருக்கு..
ஆனா இதவிட அழகா சிவந்ததைஎல்லாம்
நா பாத்திருக்கேனே.."
"இன்னும் சிவக்குமா?
எங்க பாத்த?"
" உன் கன்னத்துலத்தான்..
ஒருமுறை வெட்கப்பட்டு காட்டேண்டி.."
.
.
" ஏய்.. நா ஒருமுறைதானே சொன்னேன்..
அதுக்குள்ள ஒரு வெட்க்ககுளியலே நடத்திட்ட?"
"ஏய்.. சும்மா இருடா.."
ம்ம்.. எங்கிருந்துதான் வருமோ
இந்த பெண்களுக்கு மட்டும்.
************************************
எதிரே வரும் என்னை பார்த்ததும்
உன் கண்கள் சிரிப்பது இயல்புதான்..
அனால் உன் கைகள் உடைகளை
சரி செய்கின்றனவே ஏன்?
மறைக்கிறையா.. இல்லை ஞாபகம் செய்கிறாயா?
*********************************************
என்னிடம் மிகப்பிடித்தது
என்னவென்று கேட்டாய்..
அதெல்லாம் சொல்லக்கூடாதது
என்று சொன்னதற்கு
முறைத்தால் என்னடி நியாயம்?
****************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Dec 9, 2010

நான் + நாம்..

தயக்கமின்றி பேசிய
வார்த்தைகளெல்லாம்
தள்ளி செல்ல மறுத்துவிட்டன.
தவணை முறையில்
தந்த முத்தங்களெல்லாம்
தயக்கமின்றி கொல்கின்றன.
குறுகி போய் ஒரு வட்டத்திற்குள்
அடைபடும் முன்
வந்துவிடு வசந்தங்களாய்..
ஒருமுறையேனும்.
---------------------------------------------------------------
நான் கேட்காமலேயே
உன் பிரியங்களை
வரங்களாக்கி தர
தெரிந்திருந்தது உனக்கு.
கெஞ்சி கேட்டும்
பிரிவுகளை தள்ளி போட
முடியவில்லை உன்னால்.
----------------------------------------------------------

அவள் என்னோடு
பழகியது வரங்களாக
இருக்கலாம் எனக்கு.
நான் அவளோடு
பழகியது சாபங்களாகி
போய்விட்டதே..

வரங்களை மறுக்கலாம்..

சாபங்களை என்ன செய்ய?
-------------------------------------------

நான் அவளுடன் இருந்த
நேரங்கள் குறைவுதான்..
அனால் அவள் என்னுடன்
இருந்த.. இருக்கபோகும்
நேரங்கள் மிக அதிகம்.
முன்பு நிஜமாகவும்..
கனவாகவும்..
இனி நினைவாகவும்..
கண்ணீராகவும்.
-------------------------------------------
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Dec 8, 2010

மூச்சு விடும் ரோஜாப்பூ..

ப்ரியமுடன்..

லோகநாதன்.

நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு..

கண்ணாடி முன் நிற்கும்போதெல்லாம்
உன் கண்களை உற்று பார்த்து விடாதே..
உன்னால் களைந்தெறியப்பட்ட
என் ப்ரியங்கள்
உன் நேரங்களை அல்லது சந்தோஷங்களை
பறித்து விட கூடும்.
**********************************
காலை பனியாய்..
மாலை மயக்கமாய்..
சிரிக்கும் பூக்களாய்..
வெடிக்கும் ஆசைகளாய்..
கடக்கும் காலம் முழுதும்
காதலாய் உன்னை
சுமக்க வேண்டுமென்றேன்..
பதிலாக நினைவுகளையேனும்
தந்து சென்றாயே..
செல்லம்தானடி நீ எனக்கு.
*******************************
நீ.. உன் வார்த்தைகள்..
உன் மனம்.. அதன் வாசங்கள் என
உன்னை சார்ந்த எல்லாவற்றையும்
நேசிக்க கற்றுகொண்டவன் நான்.
உன் பிரிவுகளை மட்டும்
வெறுத்து விடுவேனென
நினைத்து விட்டயாடி முட்டாள் பெண்ணே..
*************************************
பூவும் வாசம் போல
இணைந்திருந்தோம் நீயும் நானும்.
பூக்கள் போல வாடிவிட்டேன்
உன் பிரிவுகளினால்..
ஆனாலும் வாடிய பூக்களின் வாசங்களாய்
உன் நினைவுகள் மட்டும் என்னுடனே.
********************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Dec 4, 2010

மறந்து விடுகிறேன்..

கலைந்து கொண்டிருப்பவை
எல்லாமே கனவுகள் அல்ல..
சமயங்களில் நிஜங்களும்
கலைந்து கதறுகின்றன.
தூக்கி எறிபவை
எல்லாமே குப்பைகள் அல்ல..
சமயங்களில் பிரியங்களும்
தூக்கி எறியப்பட்டு
ஊமையாய் அழுகின்றன.
கடக்கும் காலங்கள் எல்லாம்
கண்களில் ஏந்துகிறேன்
கிடைக்கும் தனிமைகள் எங்கும்
நினைவுகளில் தேடுகிறேன்
பூக்கள் வாடிய பின்தானே
வாசங்களை உணர்ந்தேன்
மனது வலித்த பின்தானே
வார்த்தைகளை உணர்ந்தேன்..
என்னுடைய உண்மைகளை
சொல்ல வார்த்தைகள் இல்லை
உன்னுடைய நினைவுகளை
கலைக்க வழி இல்லை..
இழந்து விடுகிறேன் எல்லாவற்றையும்
உன்னை நினைக்கும்போது..
மறந்து விடுகிறேன் என்னையும்
உன்னை மறக்க நினைக்கும் போது.
********************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.