Apr 10, 2009

திசை மாறும் பறவை..

உப்பை தின்றவன்
தண்ணீர் குடிக்க வேண்டும்..
காதலை அறிந்தவன்
கண்ணீர் விட வேண்டும்..
இன்னும் எழுதப்படாத
விதிகளிங்கே எத்தனையோ..

நேசம் வைத்து
நிறைந்த மனது
காயம்பட்டு
தவிக்குது இங்கே..
காதல் வைத்து
கரைந்த உயிர்
கண்ணீர் விட்டு
கலங்குது இங்கே..

சிகரம் தொடும்
வாழ்க்கை..
இங்கே சிறகுகள்
முறிந்து கிடப்பது
யாருக்கு தெரியும்..

வானம் தொட்டுவிடும்
வயசு..
இங்கே வழி தெரியாமல்
தடுமாறிக்கொண்டிருப்பது
எத்தனை பேருக்கு தெரியும்..

சிறகடித்து பறக்கும்
மனசு..
இன்று கிணற்று தவளையாய்
ஒடுங்கி கிடப்பது
அந்த கடவுளுக்கு கூட
தெரிய வாய்ப்பில்லைதான்..

ஒன்றாய் பயணிக்கும்
இதயங்களிரண்டு
தனித்தனியாய்
போகும் தருணங்கள் மிக
கொடூரமானவைதான்..
கண்சிமிட்டும்
ஜோடிபுறாக்களின் பயணம்
காற்றின் அலைக்கழிப்பால்
ரத்தாகும் தருணங்களை போல.
........................................................

9 comments:

நட்புடன் ஜமால் said...

பறவையின் திசையை நாம் சரியாக அறிந்திருக்காவிட்டால்

திசை மாறுவது போல் தான் தோன்றும்.

நட்புடன் ஜமால் said...

வலிகள் உணர்ந்தேன் வரிகளில்.

கவிதை அருமை, அற்புதம், அழகு

இப்படியெல்லாம் சொல்லும் மனநிலையில் நான் இல்லை.

நட்புடன் ஜமால் said...

காதல்

என்பது சேர்ந்து வாழ்வதில் இல்லை.

நாம் காதலிக்கும் ஒருவர் சந்தோஷமாக வாழ்கிறாரா என்பதே முக்கியம்.

அது நாம் கொடுப்போம் என்று தான் காதல் செய்கிறோம், அது வேறு இடத்தில் தஞ்சம் புகுந்த புறாவாக இருக்கலாம், அல்லது நம்மிடம் வர இயலாத புறாவாக இருக்கலாம்

அதன் நிலை என்னவென்று நாமறியோம் ...

ஆனாலும் காதல் என்பது

நம்மோடு வாழ்வது அல்ல

சந்தோஷமாக வாழ்வதே

புறா எந்த கூட்டில் இருப்பது என்பதா முக்கியம்

நமது இதய்க்கூட்டில் உள்ள புறா வேறு கூட்டில் உள்ளதென அறிந்தாலும், அது நிறைவாய் வாழ, அந்த வாழ்வில் நாம் மகிழ்ந்து இருப்பதே காதல்.


ஆதலினால் காதல் செய்வீர்...

Anonymous said...

konda kathal kolgai kathal maaratha kathal marakum kathal mannikum kathal inikkum kathal imsikkum kathal arintha kathal ariyak kathal ippadi eni erukum ella kathalumey valikum athaney kathalil inbam....aanal antha valiai thanguvadhu thaan kadinam kavithai padithen yeno kangal paniththadhu....enakum valikiradhu ennavan enakul erunthum...

வேத்தியன் said...

ஆஹா...
ஆரம்பமே அசத்தல்...

வேத்தியன் said...

படைப்பு அருமை...
வாழ்த்துகள்...

logu.. said...

Thanks for all..

அப்துல்மாலிக் said...

படித்தேன்.. ரசித்தே... கொஞ்சம் மனம்சங்கடப்பட்டேன் உங்கள் வரிகளை புரிந்து

kavitha said...

சிகரம் தொடும்
வாழ்க்கை...
சிகரம் தொடும்
வாழ்க்கை....
சிறகடித்து பறக்கும்
மனசு..
வழி தெரியாமல்
தடுமாறிக்கொண்டிருப்பது

rusitha varigal