Sep 30, 2010

மனசு..

இனி நமக்கான நேரங்களே
இல்லையென உணரும்போது
கடந்துசென்ற நமக்கான
நேரங்கலனைத்தையும் மிகச்சிறப்பாய்
உணர்கிறது மனசு..
நமக்கான நேரங்களனைத்தும்
பெரும்பாலும் சண்டைகளாகவே
முடிந்திருந்தாலும்.
------------------------------------------------------------------
எப்போதும் போல்தான்
வருகின்றன மழை நாட்கள்..
கொஞ்சம் கவிதைகளையும்
நிறைய்ய நினைவுகளையும்
தாங்கிக்கொண்டு..
மனசில் மட்டும் ஏனோ
சந்தோசங்களுக்கு பதிலாய் வலிகள்.
-------------------------------------------------------------
கடந்து சென்ற காலங்கள் அல்லது
உதிர்ந்துவிட்ட வார்த்தைகளை
போல்தான் சில உறவுகளும்..
எவ்வளவுதான் தவமிருந்தாலும்
கைசேருவதே இல்லை
கடைசீவரை..
---------------------------------------------------
மிகப்பிடிக்கும் என்றாலும் இப்போதெல்லாம்
அடர்தனிமைகளில் பயணம் செய்யவே
நடுங்குகிறது மனசு.. வழியெங்கும்
உயிரை கொல்லும் உன் நினைவுகளும்
சுயங்கள் திருடும் உன் பிம்பங்களும்
மட்டுமே சிதறி கிடக்கின்றன.
.................................................................................
ப்ரியமுடன்...
லோகநாதன்.

Sep 7, 2010

காதல் மகராணி..

பூக்களுக்கு பூக்கள்
நலம் விசாரிப்பது இயல்புதான்.
அதற்காக வரும்போதெல்லாம்
பூந்தோட்டத்திற்கு போகாதே நீ..
இந்த நடமாடும் செடியில்
எவ்வளவு அழகாய் இரண்டு பூக்கள்
இருக்கின்றன என்று பூக்களெல்லாம்
பொறாமைபடுகின்றன.
நம் உலகின் ஒவ்வொரு
நாளையும் மழை நாளாக
மாற்றி வைக்க போகிறேன் அல்லது
விடியாத இரவுகள் செய்து
வைக்க போகிறேன்..
உன் மனம் சாய்ந்து தூங்க.
உன்னுடனான
என் பயணங்கள் எல்லாமே
சுகமா என்று சொல்லதெரியவில்லை..
ஆனால் ஒவ்வொரு முறையும்
இத்தருணங்கள் சிறகு முளைத்து
பறந்துகொண்டே இருக்கவேண்டுமென்று
நினைப்பது நிஜம்.
நீ தலை சாய்த்து பேசுவதை
ரசிக்கவே தனியொரு உலகம்
செய்துவைக்கபோகிறேன்..
அங்கே மிக முக்கியமாய்
கடிகாரம் இல்லை.. காலம் இல்லை..
இதுவரை உன்னருகே இருக்கும்போது
எனக்கு மட்டுமே மாறமலிருந்த காலம்
இனி இருவருக்குமே..
யாருமற்ற தெருவில்
உன் வாசம் பற்றி நடக்கும்போது
எதேச்சையாய் எட்டி முத்தமிட..
'ஹ்ய்யூ.. யாராவது பார்த்தால்
என்னாவது?'
பூக்களாய் வெடிக்கிறாய்..
நம் காதல் கைகட்டி
ரசித்துக்கொண்டிருப்பதை அறியாமல்.
.............................................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.