Jan 31, 2010

கண்ணாடி பொம்மை..

அடர்ந்த பனி பொழிவினூடே
மெரூன் வர்ணத்தில்
கண்ணாடி பொம்மை ஒன்று

நெருங்கி வா..
பேரானந்தம் என்றது.
நெருங்க நெருங்க
காயங்களை தருமென்று
தெரியாமல் போய்விட்டதெனக்கு.

சிந்தித்து பார்..
உன்னை நெருடவில்லை
நெருங்குகிறேன் என்றது
என் சிந்தனைகளை
முடக்கி வைத்துவிட்டு.

நினைவுகளில் இதமாகவும்
சமயங்களில் ரணமாகவும்..
கனவுகளில் சுகமாகவும்
சமயங்களில் சுமையாகவும்
எப்போதும் என்னுடனே
இருக்க பழகிவிட்டது அது.

நானே அறியாமல்
மெல்ல மெல்ல
மிக நுட்பமாய் என்
சுயங்களை திருடி எங்கோ
ஒழித்து வைக்க தொடங்கியது.

மெல்ல மெல்ல சிதைந்து
தனிமையில் புதைந்து
ஆழ்மனத்தின் ஏதுமற்ற வெளியில்
மிக மிக நிதானமாய்
பயணிக்கும்போது
சர்வ நிச்சயமாய்
என்னால் உணர முடிகிறது.

அது கண்ணாடி பொம்மையல்ல..
காதலென்று.
.................................................
ப்ரியமுடன்
லோகநாதன்.

1 comment:

kavitha said...

அற்புதமான வரிகளை ரொம்ப சாதரணமாக எழுதுகிறீர்கள் ...
வார்த்தைகளில்லை எப்பொழுதும் போலவே ....