Jan 18, 2010

முழுதாய் நான் தோற்றுவிட்டேன்..

எதிர்படும் எத்தனையோ
முகங்களில் மனதில்
பளிச்சென்று பதியும்
சிற்சில முகங்களில்
ஒன்றாகவோ..

சூழல் மறந்து
தாய்மையை
ரசிக்க வைக்கும்
மழலையின் மந்திர
புன்னகையாகவோ..

கண்ணாடி முன்
நிற்கும்போதெல்லாம்
சட்டென்று ஞாபக செல்களில்
தெறித்து செல்லும்
விநாடி நேர
நினைவுகளாகவோ..

நாள் முழுதும்
நனைந்திருந்தாலும்
வீட்டில் நுழைந்ததும்
ஜன்னல் கம்பிகளில்
பட்டு தெறித்து முகம்
சிலிர்க்க வைக்கும்
அந்தி நேரத்து
மழை சாரலாய்..

இன்னும் எப்படிஎல்லமோ..
உன்னுள் எந்தன் இருப்பை
உணர செய்ய முயன்று
முழுதாய்
தோற்றுவிட்டேன் நான்.
............................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.

5 comments:

S.A. நவாஸுதீன் said...

ஹ்ம்ம். ரொம்ப நல்லா இருக்கு லோகு.

அப்துல்மாலிக் said...

good keep it up

நட்புடன் ஜமால் said...

சூழல் மறந்து
தாய்மையை
ரசிக்க வைக்கும்
மழலையின் மந்திர
புன்னகையாகவோ..]]

அழகு ...


நாள் முழுதும்
நனைந்திருந்தாலும்
வீட்டில் நுழைந்ததும்
ஜன்னல் கம்பிகளில்
பட்டு தெறித்து முகம்
சிலிர்க்க வைக்கும்
அந்தி நேரத்து
மழை சாரலாய்..]]

இதுவும்.

து. பவனேஸ்வரி said...

மனதை வருடும் வரிகள்...

kavitha said...

அருமை .... வார்த்தைகள் ஒவ்வொன்றும் சுவை