என் கனவுக்கும்
இல்லை கால்கள்..
உன்னிடம் ஓடிவர..
என் நினைவுக்கும்
இல்லை நிஜங்கள்..
உன்னை சேர்ந்துவிட..
காலம்காலமாய்
காதலின் சாபக்கேடு
இந்த பிரிவுகள்..
என்றாலும் பரவாயில்லை..
முட்கள் இல்லாத ரோஜாக்கள்
அழகாய் இருப்பதுமில்லை..
வேதனை இல்லாத காதல்
சுகமாய் இனிப்பதுமில்லை.
..........................................................
பாசம் என்ன.. நேசம் என்ன..
எல்லாம் வேஷம்தானடி..
உண்மை ஏது.. உணர்ச்சி ஏது..
உலகம் ஊமைதானடி..
ஆசை வைத்து மாலை செய்தேன்
அது சேரவில்லை உந்தன் சன்னதிதான்..
கட்டாந்தரை.. கல்லறை போர்வை..
அது எந்தன் நெஞ்சுக்கு நிம்மதிதான்..
ஜோடி சேர ஆசையுண்டு
சொந்தம் என்று நீ பக்கமில்லை..
வாழ்ந்து பார்க்க வாழ்க்கை உண்டு
சேர்ந்து வாழ ஒரு வாழ்க்கை இல்லையே..
கட்டம் போட்டு முடிக்கும் முன்பே
கணக்கை முடித்தது யார் செய்த தவறு..
வட்டம் ஒன்று போட்டு வைத்து அதில்
வாழ்க்கையை வைத்தவன் செய்த தவறுதானடி.
.................................................................
ப் ரி ய மு ட ன் . . லோ க நா த ன். .
எது காதல்? -அத்தியாயம் 2
4 years ago
8 comments:
முட்கள் இல்லாத ரோஜாக்கள்
அழகாய் இருப்பதுமில்லை..
வேதனை இல்லாத காதல்
சுகமாய் இனிப்பதுமில்லை
intha lines nalaa iruku pa.
thnk uuuuuuuuuuuu
கலக்கறீங்க போங்க..
படமும் மிக அழகு.
\\கலக்கறீங்க போங்க..\\
\\படமும் மிக அழகு.\\
nanringa..
muthal varukaikkum vazhthirkum..
//காலம்காலமாய்
காதலின் சாபக்கேடு
இந்த பிரிவுகள்..
என்றாலும் பரவாயில்லை..
முட்கள் இல்லாத ரோஜாக்கள்
அழகாய் இருப்பதுமில்லை..
வேதனை இல்லாத காதல்
சுகமாய் இனிப்பதுமில்லை//
அருமையான வரிகள்! முற்றிலும் உண்மை! கவிதையில் வேதனைத் தெரிகிறது...
\\ து. பவனேஸ்வரி கூறியது...
//காலம்காலமாய்
காதலின் சாபக்கேடு
இந்த பிரிவுகள்..
என்றாலும் பரவாயில்லை..
முட்கள் இல்லாத ரோஜாக்கள்
அழகாய் இருப்பதுமில்லை..
வேதனை இல்லாத காதல்
சுகமாய் இனிப்பதுமில்லை//
அருமையான வரிகள்! முற்றிலும் உண்மை! கவிதையில் வேதனைத் தெரிகிறது...\\
appadiya?
:)
Post a Comment