
கவிதையாய்
வாசம் செய்ய
தவிக்கிறது
என் காதல்..
உன் ப்ரியங்கள்தான்
இல்லை இங்கே..
பூக்களாய்
தவமிருக்கிறது
என் காதல்..
தென்றலாய்
உன் வருகைகள்தான்
இல்லை இங்கே..
சட்டென்று தோன்றி
சட்டென்று மறையும்
வானவில்லை போல்தான்
நமக்கான நேரங்களும்..
எதிர்பாராமல் தோன்றி
எதிர்பாராமல் முடிந்துவிட்டன..
என் கைகளை
பிடித்து உணர்த்த
வாய்ப்பில்லைதான் உனக்கு..
என் கண்களை பார்த்து
சொல்லும் வாய்ப்பும்
இல்லைதான் உனக்கு..
என்றாலும்..
எப்படியேனும் எனக்கு
உணர்த்தியிருக்கலாம் நீ..
இதுதான் நம்
கடைசி சந்திப்பென்று..
இன்னும் கொஞ்சம்
ஆழமாக உன் வார்த்தைகளை
தேக்கி வைத்திருக்கக்கூடும்
என் நெஞ்சம்.
.......................................................
ப் ரி ய மு ட ன் . .
லோ க நா த ன் . . .
5 comments:
ippa than nalla iruku pa
kavithia nalla iruku
nanri..
nanri..
nanri..
//சட்டென்று தோன்றி சட்டென்று மறையும்வானவில்லை போல்தான் நமக்கான நேரங்களும்..எதிர்பாராமல் தோன்றி எதிர்பாராமல் முடிந்துவிட்டன.. //
அழகான கவிதை...எதார்த்தம் நிறைந்திருக்கிறது...
\\து. பவனேஸ்வரி கூறியது...
//சட்டென்று தோன்றி சட்டென்று மறையும்வானவில்லை போல்தான் நமக்கான நேரங்களும்..எதிர்பாராமல் தோன்றி எதிர்பாராமல் முடிந்துவிட்டன.. //
அழகான கவிதை...எதார்த்தம் நிறைந்திருக்கிறது...\\
thanksnga..
aama etharthamna ennanga..
hub003
fox223
for741
see333
ber456
Post a Comment