Mar 26, 2011

எங்கிருக்கிறாய் நீ..


காய்ந்து போன முற்றத்தை
ஈரமாய் அணைத்துக்கொள்ளும்
நிலவின் ஒளியாய்..
உன் நினைவுகள்.
*****************************


ஏதும் அறியாதவையாய்
எப்போதும் போல கேட்கின்றன
என் தோட்டத்து பூக்கள்..
எங்கே உன் அன்பென்று?
தவமின்றி கிடைத்த
வரங்கள் யாவும்
நிலைப்பதில்லையென்று
சொன்னால் புரியுமா அவைகளுக்கு.
***********************************


கவிதைகள் விற்பனைக்கு..
அலங்கரிக்கப்பட்ட வார்த்தைகளிலோ
அசரடிக்கும் கவிதைகளிலோ
வாழ்வதில்லை காதல்.
**********************************


மனதறிந்து பேசுபவரிடம்கூட
மனதோடு தோன்றுவதை
பேசிவிடாதே..
மிகசிலரால் மட்டுமே
புரிந்துகொள்ள முடிகிறது.
பலரால் பிரிந்து செல்லதான்
முடிகிறது மிக எளிதாக.
*********************************


தேசம் இழந்த அகதியாய்
அலைந்து கொண்டிருக்கிறது
மனசு..
எங்கிருக்கிறாய் நீ.
*********************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

13 comments:

sulthanonline said...

//தேசம் இழந்த அகதியாய்
அலைந்து கொண்டிருக்கிறது
மனசு..
எங்கிருக்கிறாய் நீ.//


superb kavithai logu specially that line awesome

ஹேமா said...

லோகு...தவமில்லாமல் சுலபமாய்க் கிடைப்பதில்லை காதல்.வலி வலியையே வலிக்கும் வலி வரிகளில் !

Chitra said...

கவிதைகள் விற்பனைக்கு..
அலங்கரிக்கப்பட்ட வார்த்தைகளிலோ
அசரடிக்கும் கவிதைகளிலோ
வாழ்வதில்லை காதல்.



.......இந்த கவிதை வித்தியாசமாக தனித்து நிற்கிறது. அருமை.

ரேவா said...

கவிதைகள் விற்பனைக்கு..அலங்கரிக்கப்பட்ட வார்த்தைகளிலோஅசரடிக்கும் கவிதைகளிலோவாழ்வதில்லை காதல்..////

/////மனதறிந்து பேசுபவரிடம்கூடமனதோடு தோன்றுவதைபேசிவிடாதே..மிகசிலரால் மட்டுமேபுரிந்துகொள்ள முடிகிறது.பலரால் பிரிந்து செல்லதான்முடிகிறது மிக எளிதாக.//////

மிக அருமையான கவி வரிகள் லோகு..."எங்கிருக்கிறாய் நீ.." தேடலின் சுகம் அருமை...

logu.. said...

\\ sulthanonline said...
//தேசம் இழந்த அகதியாய்
அலைந்து கொண்டிருக்கிறது
மனசு..
எங்கிருக்கிறாய் நீ.//


superb kavithai logu specially that line awesome\\

Thanks a lot.. sulthan..

logu.. said...

\\ ஹேமா said...
லோகு...தவமில்லாமல் சுலபமாய்க் கிடைப்பதில்லை காதல்.வலி வலியையே வலிக்கும் வலி வரிகளில் !\\

உங்க கமெண்டே கவிதை போல இருக்கே,,

logu.. said...

\\ Chitra said...
கவிதைகள் விற்பனைக்கு..
அலங்கரிக்கப்பட்ட வார்த்தைகளிலோ
அசரடிக்கும் கவிதைகளிலோ
வாழ்வதில்லை காதல்.



.......இந்த கவிதை வித்தியாசமாக தனித்து நிற்கிறது. அருமை.\\

நன்றிங்க சித்ரா.

logu.. said...

\\ ரேவா said...

மிக அருமையான கவி வரிகள் லோகு..."எங்கிருக்கிறாய் நீ.." தேடலின் சுகம் அருமை...\\

நன்றிங்க ரேவா.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அழகான படங்கள்.... அதற்கேற்ற வரிகள்... :))

Anonymous said...

//கவிதைகள் விற்பனைக்கு..
அலங்கரிக்கப்பட்ட வார்த்தைகளிலோ
அசரடிக்கும் கவிதைகளிலோ
வாழ்வதில்லை காதல்.//

சொல்லத் தெரியாமல் நான் தவித்துக் கொண்டிருந்த உண்மை...

Anonymous said...

//தேசம் இழந்த அகதியாய்அலைந்து கொண்டிருக்கிறதுமனசு..எங்கிருக்கிறாய் நீ.*********************************//

உன் காதலை மிகச் சரியாய் புரிந்து வைத்திருக்கிறது உன் கவிதைகள் லோகு..

logu.. said...

\\ அப்பாவி தங்கமணி said...
அழகான படங்கள்.... அதற்கேற்ற வரிகள்... :))
\\

நன்றிங்க தங்கமணி..

logu.. said...

\\ தமிழரசி said...
//கவிதைகள் விற்பனைக்கு..
அலங்கரிக்கப்பட்ட வார்த்தைகளிலோ
அசரடிக்கும் கவிதைகளிலோ
வாழ்வதில்லை காதல்.//

சொல்லத் தெரியாமல் நான் தவித்துக் கொண்டிருந்த உண்மை...\\

ம்ம்.. எல்லோர் மனசிலும் ஏதோ ஒரு வலி இருக்கதான் செய்கிறது.