Mar 16, 2011

அழகு பிசாசு.

நீ வரும்வரை
தடுமாறிக்கொண்டிருக்கும் என் நேரங்கள்..
நீ வந்தவுடன் இறக்கை கட்டி
பறக்கின்றன..
அப்படி என்னதான் மந்திரம் வைத்திருக்கிறாய்?
**************************************
அழகென்ற சொல்லுக்கு
எதிலெதிலோ விளக்கம் கிடைத்தது.
பேரழகு என்பதோ உன்னை
பார்த்த பின்புதான் விளங்கியது.
அழகு பிசாசே..
உன்னை ரசிக்க இன்னும் எத்தனை
காலங்கள் வேண்டுமானாலும்
வரமாய் வாங்கலாமடி.
**************************************
சாலையோரம் என் கை பிடித்து
நடக்கையில் வேறு எதையும் நீ
தொடுவதே இல்லையாம்.
உதிரும் பூக்கள் என்னிடம்
சண்டைக்கு வருகின்றன.
தெரியுமா அவைகளுக்கு..
உன் கைபிடித்து நடக்கவே
என் நேரங்களை நான் பார்த்து பார்த்து
செய்துகொள்வது.
***************************************
எப்போதுமில்லாத அதிசயமாய் நீ
முத்தப்பந்தயத்திற்கு
ஒப்புக்கொள்ளும்போதே
நான் யோசித்திருக்க வேண்டும்..
அம்மாடீ.. கேட்பவர்களுக்கு
இனி என்ன பதில் சொல்ல நான்?
************************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

12 comments:

சுசி said...

:))))

karthikkumar said...

NICE...:)

ரேவா said...

அழகு பிசாசு.அழகு

gayathri said...

எப்போதுமில்லாத அதிசயமாய் நீ
முத்தப்பந்தயத்திற்கு
ஒப்புக்கொள்ளும்போதே
நான் யோசித்திருக்க வேண்டும்..
அம்மாடீ.. கேட்பவர்களுக்கு
இனி என்ன பதில் சொல்ல நான்?


HAHAHA

ASAI ATHIGAM THAAN

logu.. said...

நன்றிங்க சுசி..

logu.. said...

\\ karthikkumar said...
NICE...:)
\\

வாங்க மாம்ஸூ

logu.. said...

\\ karthikkumar said...
NICE...:)
\\

வாங்க மாம்ஸூ

logu.. said...

\\
ரேவா said...
அழகு பிசாசு.அழகு\\

ஹி ஹி அழகுதான்..

நன்றிங்க ரேவா.

logu.. said...

\\ gayathri said...
எப்போதுமில்லாத அதிசயமாய் நீ
முத்தப்பந்தயத்திற்கு
ஒப்புக்கொள்ளும்போதே
நான் யோசித்திருக்க வேண்டும்..
அம்மாடீ.. கேட்பவர்களுக்கு
இனி என்ன பதில் சொல்ல நான்?


HAHAHA

ASAI ATHIGAM THAAN\\

ஹி ஹி இருக்கதானே செய்யும்.
நன்றிங்க காயத்ரி.

ஹேமா said...

ராட்சசி....பிசாசு...அன்பு கூடினா இப்பிடியெல்லாம் கூப்பிட வருமோ.என்னமோ போங்க !

லோகு...ஆசைப்பட்டா அனுபவிக்கவும் தயாரா இருக்கணும்.விளங்கிச்சோ !

தோழி பிரஷா said...

சாலையோரம் என் கை பிடித்துநடக்கையில் வேறு எதையும் நீ தொடுவதே இல்லையாம்.உதிரும் பூக்கள் என்னிடம் சண்டைக்கு வருகின்றன.

ரசித்தேன்.

sudhan from callezee said...

awesome lines about love