பெரும்பாலும் பெண்கள் அழுதால்
பேய் மாதிரி இருக்குமாம்..
நீயும் அப்படிதான் இருப்பாய் என
நினைத்திருந்தேன்.
முதன்முதலாய் எனக்காய் நீ
அழுததை பார்க்கும்வரை.
*****************************
“சுச்சூ... அம்முகுட்டி..”
நீ பக்கத்து வீட்டு குழந்தையை
கொஞ்சி கொண்டிருக்கும்போது
“குழந்தையோடு என்ன விளையாட்டு..
வா சாப்பிடுவாய்” என அழைத்த
உன் பாட்டிக்கு தெரியுமா?
இனம் இனத்தோடுதான் சேருமென்று.
********************************
“ஹாய்..”
“ஹாய்..”
“இப்போதான் வந்தியா?”
“ம்ம்.. நீ ஏன் லேட்டு?”
“கொஞ்சம் வேலை.. அதான் லேட்டு”
“இல்ல.. என்னமோ இருக்கு”
“அதான் சொல்றமுல்ல.. வேலைனு..”
“நா நம்ப மாட்டேன்.. நீ சொல்லு”
”என்ன சொல்ல?”
“ஏன் லேட்டுனு சொல்லு”
“அதான் வந்துடேன்ல.. விடு அதை..”
“அப்டீல்லாம் விட முடியாது..
சொல்லிதான் ஆகணும்..”
“நீ இப்டீல்லாம் சொன்னா கேக்க மாட்ட..
இப்போ சொல்றேன் பாரு..”
“சொல்லு..சொல்ல்ல்ல்..ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....”
உன் கண்ணாடி வளையல்கள்
வெட்கபட்டு கூச்சலிட..
நம் காதல் மெல்லமாய் இறக்கை கட்டியது.
எல்லாம் முடிந்து கடைசியில்
பெருமூச்சுடன் முனகினாய்..
”இத மொதல்லயே பண்ணிருக்கலாம்..
தேவையில்லாம வம்பு சண்டை போட்டு..
ஹம்ம்ம்.. சரியான டியூப்லைட்டு..”
அட..கிராதகிகளா...
***********************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.
14 comments:
////அம்முகுட்டி..”நீ பக்கத்து வீட்டு குழந்தையை கொஞ்சி கொண்டிருக்கும்போது“குழந்தையோடு என்ன விளையாட்டு..வா சாப்பிடுவாய்” என அழைத்த உன் பாட்டிக்கு தெரியுமா?இனம் இனத்தோடுதான் சேருமென்று.///
.நண்பா அட கிராதகி"களா".கவிதை அருமை...
sema feel maams :))
கலக்கீட்டீங்க வரிகள் அனைத்துமே அருமை
nalla irukga
கிராதகி அம்முக்குட்டியை நீங்க இன்னும் புரிஞ்சு வச்சுக்கலன்னு தெரிது.நீங்க இப்போதைக்குப் பரீட்சையில் தோல்வி.திரும்ப பரீட்சை எழுதணும லோகு !
//பெரும்பாலும் பெண்கள் அழுதால்
பேய் மாதிரி இருக்குமாம்..//
யார் சொன்னது????
//ஹம்ம்ம்.. சரியான டியூப்லைட்டு..”
அட..கிராதகிகளா..//
எங்கயோ பல்பு வாங்கியிருக்கீங்கனு நல்லா புரியுதுங்க...
நன்றிங்க ரேவா..
வாங்கோ மாம்ஸூ..
நன்றிங்க தமிழ்தோட்டம்.. காயத்திரி.
எத்தன வாட்டி எழுதுனாலும் வேலைக்காகலங்க ஹேமா.
\\ இந்திரா said...
//பெரும்பாலும் பெண்கள் அழுதால்
பேய் மாதிரி இருக்குமாம்..//
யார் சொன்னது????\\
வேற யாரு.. நாங்கதேன்..
Ore peelings pola irukku :-))
அருமை..
Post a Comment