பிரிவுகள் சுகம்தானே
அதற்கேன் இப்படி வருத்தம்?
களையிழந்த காம்பிடம்
கேட்டதற்கு..
அவளில்லாத நீயும்
இப்படித்தானே இருந்தாய் என
திருப்பி கேட்கிறது.
...............................................................
உனக்கும் எனக்குமான
நேரங்களைஎல்லாம்
மிக கவனமாய் சேர்த்து
வைத்திருக்கிறது மனசு.
நமக்கான எதிர்காலமே
இனி இல்லை என
நீ உணர்த்தும்போதேல்லாம்
நம் இறந்தகாலங்களை
இறுகப் பற்றிக்கொள்ள
தவறியதேயில்லை ஒருபோதும்.
.............................................................
ஒருமுறை அழகாய்
பூத்து குலுங்கினால் போதும்
ஆயுள் வரை வாடாமல்
பார்த்துகொள்ளலாம்தான்.
எனக்கு வேர்களே இல்லை என்கிறாயே.
.........................................................................
விரும்பினாலும் விலகினாலும்
உன்னிடம் மட்டுமே வருவேனென
அடம்பிடித்து தொலைக்கிறது.
விரும்பி வரும்போதெல்லாம்
காயங்கள் மட்டுமே தருவாய்
என்பதை அறியாமல்.
..........................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.
15 comments:
பிரிவுகள் சுகம்தானே அதற்கேன் இப்படி வருத்தம்?களையிழந்த காம்பிடம் கேட்டதற்கு.. அவளில்லாத நீயும் இப்படித்தானே இருந்தாய் என திருப்பி கேட்கிறது///
அருமை லோகு..
அவளுக்காக இப்படி ஏங்கும் உங்களை அவள் புரிந்து கொள்ளவே இல்லையா?? கொடுமை :(
nanringa jj.
எனக்குமான நேரங்களைஎல்லாம் மிக கவனமாய் சேர்த்து வைத்திருக்கிறது மனசு.நமக்கான எதிர்காலமே இனி இல்லை என நீ உணர்த்தும்போதேல்லாம் நம் இறந்தகாலங்களை இறுகப் பற்றிக்கொள்ள தவறியதேயில்லை ஒருபோதும்
nalla irukuga
உண்மையோ கற்பனயோ தெரியவில்லை லோகு.வரிகளில் கொஞ்சம் மனம் கலங்குகிறது.
//விரும்பினாலும் விலகினாலும்
உன்னிடம் மட்டுமே வருவேனென
அடம்பிடித்து தொலைக்கிறது.
விரும்பி வரும்போதெல்லாம்
காயங்கள் மட்டுமே தருவாய்
என்பதை அறியாமல்.//
வெறுப்பவரையும் விரும்பும் இந்த கட்டுக்குள் அடங்காத மனதை என்னதான் செய்வது???
nanringa gayathiri...
\\ ஹேமா said...
உண்மையோ கற்பனயோ தெரியவில்லை லோகு.வரிகளில் கொஞ்சம் மனம் கலங்குகிறது.\\
hi..hi..
nanringa
\\வெறுப்பவரையும் விரும்பும் இந்த கட்டுக்குள் அடங்காத மனதை என்னதான் செய்வது???\\\
thirupi ennaiye kekureengaley..
enna panrathunu sollitu porathu..
பொங்கல் வாழ்த்துக்கள் சகோ..
நல்லாயிருக்கு லோகு...
பிரிவின் போது வாடுவதை பற்றி.. அழகாய் சொல்லி இருக்கீங்க..
எதிர்காலம் இல்லை என்றானால்...
பாழாய்ப் போன மனசு....
இறந்த காலத்தை தான்...
பற்றிப் பிடிக்கும்... என்னங்க பண்றது??
//ஒருமுறை அழகாய்
பூத்து குலுங்கினால் போதும்
ஆயுள் வரை வாடாமல்
பார்த்துகொள்ளலாம்தான்.
எனக்கு வேர்களே இல்லை என்கிறாயே//
அழகான வரிகள்..
வரிகள் மிகவும் அருமையாக உள்ளது நண்பரே...காதலின் ஏக்கம் நன்றாகப் பிரதிபலிக்கிறது...யதார்த்தமான உங்கள் கவிதை வரிகளுக்கு அடியேன் அடிமை :)
கவிதைகள் அருமை நண்பரே.... பிரிவின் வலியை உணர்த்துகிறது :-(
////மாறும் உலகில் மாற்றம் ஒன்று மட்டும் மாறாதது அல்ல.. என் காதலும் கூட..//// இந்த வரிகள் தான் என்னை, உங்கள் பதிவின் பக்கம் இழுத்தது. அழகு.
நமக்கான எதிர்காலமே
இனி இல்லை என
நீ உணர்த்தும்போதேல்லாம்
நம் இறந்தகாலங்களை
இறுகப் பற்றிக்கொள்ள
தவறியதேயில்லை ஒருபோதும்.
கவிதைகள் அருமை நண்பரே..
Post a Comment