துரத்தியடித்தாலும்
அவ்வப்போது
விழியோரமாய்
மழை ஈரமாய்
நனைய வைத்து விடுகிறது
உன் நினைவுகளாய்.
தனிமை.
------------------------------
மிக மிக அழகாக
அல்லது ஆழமாக
பிறந்திருந்தாலும்
சட்டென்று கசக்கி எறிய
தெரிந்திருக்கிறது
எல்லா பெண்களுக்கும்.
பூக்களையும்
பூக்களை போன்ற மனதையும்.
---------------------------------
உன் வீட்டு ஜன்னலோர
உன் தனிமையில்
கம்பியில் பட்டு
முகத்தில் தெறிக்கும்
மழை துளியின்
ஈரமாகவோ
அல்லது ஜன்னலோர
பேருந்து பயணத்தின்
பின்னோக்கி செல்லும்
நினைவுகளாகவோ
கவிதை சொல்லிக்கொண்டு
உன்னையே சுற்றிகொண்டிருக்கும்
என் ப்ரியங்கள்.
தூறலாய் பொழியும்
ஒரு மழை நாளில்
கண்ணில் சாரலாய்
வழியும் சபிக்கப்பட்ட
நிமிடங்களில்
இது போதுமென
ஏகாந்தமாய் சாய்ந்திருக்கும்
வேளைகளில்
அல்லது கண்மூடி
மனம் நிறைந்து
ரசித்துக்கொண்டிருக்கும்
ஒரு பாடலின் வரிகளில்
என ஏதோ ஒன்றில்
உன் ஞாபக சிதறல்களில்
மெல்ல தட்டுபடலாம்
என் ப்ரியங்கள்.
நிச்சயமாக அவ்வேளையில்
கண்ணில் நீராக அல்ல
உன் இதழில் புன்னகையாக
வாழும் என் ப்ரியங்கள்.
ப்ரியமுடன்
லோகநாதன்.
8 comments:
பூக்களையும்
பூக்களை போன்ற மனதையும்.//nice words
அழகா இருக்கு.. கனமாவும்..
//நிச்சயமாக அவ்வேளையில்
கண்ணில் நீராக அல்ல
உன் இதழில் புன்னகையாக
வாழும் என் ப்ரியங்கள்.//
அழகான வரிகள்..
nice pa
ப்ரியங்கள் மறக்காது லோகு.எதிலும் தட்டுப்பட்டு தடுமாறவைக்கும் !
கசியும் காதல் நினைவுகளில் சுகமாய்த் தெறிக்கின்றன வார்த்தைகள். கவிதைகள் அழகோ அழகு.
உன் கவிதை மிக மிக பிடித்திருகிறது லோகு. ரொம்ப ரொம்ப உணர்ச்சிப் பூர்வமான வரிகள் எல்லாமே
//நிச்சயமாக அவ்வேளையில்
கண்ணில் நீராக அல்ல
உன் இதழில் புன்னகையாக
வாழும் என் ப்ரியங்கள்.//
அழகான வரிகள்..
hmmmmmmmmm
Post a Comment