தாங்கி நிற்கும் வேர்களாய்
ஆசைகளற்ற உன் நினைவுகளை
தாங்கி நிற்கும் இதயம்.
---------------------------------------
கவனிப்பாரற்று வேர்கள்
காய்ந்தே கிடந்தாலும்
சந்தோஷமாய் மலரும்
மனசறிந்த பூக்கள்.
----------------------------------
அன்பை கொல்லும் ஆயுதம்
உண்டோ என கேட்டேன்..
உள்ளதே என மெளனமாய்
சொல்லாமல் சொல்கிறாய்.
-----------------------------------
நிஜங்களாய் தேய்ந்து
நினைவுகளாய் வளர்ந்து
கண்ணீராய் கரைந்து
கொண்டிருக்கிறாய் என
தெரிய வாய்ப்புகள் இல்லைதான்.
இன்னமும் உன் நலம்
கேட்டுக்கொண்டே இருக்கும்
என் வீட்டு கண்ணாடிக்கும்..
என் தோட்டத்து பூக்களுக்கும்.
--------------------------------------
உன்னருகே இருக்கும்
நேரங்களில் ஒருபோதும்
மதித்ததே இல்லை என்றாலும்
காலம் எனக்கு மிகசிறந்த
பரிசுகளை செய்து கொடுத்திருக்கிறது.
உன் நினைவென்னும் பெயரில்.
----------------------------------------
ப்ரியமுடன்..
லோகநாதன்.
8 comments:
எல்லாமே நல்லாருக்கு.
உன்னருகே இருக்கும்
நேரங்களில் ஒருபோதும்
மதித்ததே இல்லை என்றாலும்
காலம் எனக்கு மிகசிறந்த
பரிசுகளை செய்து கொடுத்திருக்கிறது.
உன் நினைவென்னும் பெயரில்.
சூப்பர் சூப்பர்....அருகில் இருக்கும் போது, அதன் மதிப்பு எப்போதும் நமக்கு தெரியாது, அது காதலாயினும், காலமாயினும்...கவிதை சூப்பர் நண்பா....நண்பா நலமா?
பூக்களற்ற செடிகளை
தாங்கி நிற்கும் வேர்களாய்
ஆசைகளற்ற உன் நினைவுகளை
தாங்கி நிற்கும் இதயம்.
nice
நன்றிங்க சுசி.
நலம்தாங்க..
தாங்கள் நலமா ரேவா.
நன்றிங்க காயத்ரி.
அனைத்தும் அருமை
மனதைப் பறித்த பூ மனசறிந்த பூவை ஒருநாள் நிச்சயம் புரிந்துகொள்ளும் !
Post a Comment