Jun 6, 2011

உயிரே..

நீ புன்னகைத்தாலே போதுமடி
என் இதயம் உன் சொந்தமாகும்.
ஒரு வார்த்தை பேசினாலே போதுமடி
என் நாட்கள் உன் சொந்தமாகும்.
நீ இஷ்டப்பட்டு கேளடி என் குட்டி
என் மூச்சு காத்தும் உன் சொந்தம்.
********************************
தெரியுமாடி உனக்கு?
அம்மாவும் அப்பாவும் சேர்ந்து
பிள்ளைகளை கொஞ்சுவதை போல
உன் நினைவுகளும்
என் நினைவுகளும் சேர்ந்து
கொஞ்சிக்கொண்டிருக்கின்றன..
உனக்காய் பிறந்த என் பிரியங்களை.
**********************************
காதலிடம் சாபம் பெற்றேன்
உன்னில் வாழும் வரையில்
மோட்சம் இல்லையென..
குட்டி தேவதையென
வந்து சேர்ந்தாய் இனிக்க இனிக்க
கதைகள் பேசி.
புத்தம் புது மலராய்
மனதை திறந்து
அன்பை சொல்லி ஆசை வைக்க ..
தயங்கி நடித்து வெறுத்து
மறைத்து மறைத்து
புதைத்து வைத்தாய்.
அடைமழை கூட இங்கே
அனலாகி கொதிக்குதடி..
ஒரு நொடி கூட என்னில்
யுகமாகி வதைக்குதடி.
உணர்ந்திடும் நாளொன்று
வந்து சேரும் எப்படியேனும்
அன்று இருப்பாய்
எந்தன் வாசல் முன்பே.
உலர்ந்து போன என் சம்பல் கூட
உன் புன்னகையை
தாங்கி நிற்கும் அவ்வேளை.
****************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

7 comments:

கீதமஞ்சரி said...

காதல் மணக்கிறது ஒவ்வொரு வரிகளிலும். காதல் வாழ்க!

ஒரு இடத்தில் சம்பல் என்றிருக்கிறதே... சாம்பல் என்று மாற்றிவிடுங்கள்.

Anonymous said...

லோகுவை காணவில்லை மூன்றிலும்....கவிதையில் ஒரு வெறுமை..

ஹேமா said...

காதலின் வலிகள் சுமக்கிறது வரிகள்.காலம்தான் சேர்த்து வைக்கவேணும் இந்தக் காதலை !

logu.. said...

nanringa, geetha, tamilarasi,hema.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நல்லா இருக்குங்க

பிரணவன் said...

அடைமழை கூட இங்கே
அனலாகி கொதிக்குதடி..
ஒரு நொடி கூட என்னில்
யுகமாகி வதைக்குதடி. அருமை வாழ்த்துக்கள். . .

gayathri said...

தெரியுமாடி உனக்கு?
அம்மாவும் அப்பாவும் சேர்ந்து
பிள்ளைகளை கொஞ்சுவதை போல
உன் நினைவுகளும்
என் நினைவுகளும் சேர்ந்து
கொஞ்சிக்கொண்டிருக்கின்றன..
உனக்காய் பிறந்த என் பிரியங்களை.


hhaha vazthukal logu

eppavum neega kavithai ezuthite iurkanum

eppavum naan padichite irupen ok