தனிமையின் நிழல்
தாகம் தீர்க்கிறது..
உன் நினைவுகளால்
காய்ந்த இதயத்தை
உன் நினைவுகளை கொண்டே.
*********************************
எந்த பூக்களுமே
இயல்புகள் அற்று அறியாமல்
பூப்பதில்லை..
ஆசைகளை தவிர.
***************************
கொன்றாலும் அழியாதவை
உன் நினைவுகள் என்றேன்.
மெல்ல மெல்ல கொன்று
பரிசோதித்து
பார்த்துகொண்டிருக்கின்றன
உன் நினைவுகளே.
**********************************
ஏமாறுவது நம் தவறுமல்ல..
ஏமாற்றுவது அவர்கள் தவறுமல்ல..
யாசகனாய் இருத்தல் தவறென்கிறேன்.
****************************
எல்லாம் அறிந்தும்
சிதறடிக்கிறாய் மனதை.
தட்டுத்தடுமாறி கண்டெடுத்து
ஒன்றென சேர்க்க
மீண்டும் உன்னிடமே வந்து
காதல் என்கிறது.
*******************************
கரைந்த நேரங்களை
கண்களில் தேக்கி
நிகழ்காலத்தை
தொலைத்துகொண்டிருக்கும்
இயல்புகள் இழந்த மனசு.
*************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.
14 comments:
ஏமாறுவது நம் தவறுமல்ல..
ஏமாற்றுவது அவர்கள் தவறுமல்ல..
யாசகனாய் இருத்தல் தவறென்கிறேன்..
சூப்பர் அருமையான வரிகள்
கரைந்த நேரங்களைகண்களில் தேக்கிநிகழ்காலத்தை தொலைத்துகொண்டிருக்கும்இயல்புகள் இழந்த மனசு.*
அழகான கவிதை.... தனிமையோடு, காதல் நினைவுகளை அழகாக சொல்லி நிற்கிறது...
\\ ரேவா said...
கரைந்த நேரங்களைகண்களில் தேக்கிநிகழ்காலத்தை தொலைத்துகொண்டிருக்கும்இயல்புகள் இழந்த மனசு.*
அழகான கவிதை.... தனிமையோடு, காதல் நினைவுகளை அழகாக சொல்லி நிற்கிறது...\\
தனிமை அழகுதானே..
நன்றிங்க ரேவா.
எந்த பூக்களுமே
இயல்புகள் அற்று அறியாமல்
பூப்பதில்லை..
ஆசைகளை தவிர.
...the best! Super! :-)
kalakkureenga maams....:))
எல்லாம் அறிந்தும்சிதறடிக்கிறாய் மனதை.தட்டுத்தடுமாறி கண்டெடுத்துஒன்றென சேர்க்கமீண்டும் உன்னிடமே வந்துகாதல் என்கிறது
ரசனை மிக்க வரிகள். ரசிக்கவைத்த வரிகள். சற்றே வலிமறைத்த வலிகளும் கூட.
அழகிய கவிதை.
இயல்புகள் அற்ற பூக்கள்,கொன்று பரிசோதித்தல் மனதில் நிற்கிறது லோகு.ஆனால் காதலை உணர்ந்து எழுதுவது உங்களத் தாண்ட யாருமில்லை !
ரசனை...அருமை!!
எந்த பூக்களுமே
இயல்புகள் அற்று அறியாமல்
பூப்பதில்லை..
ஆசைகளை தவிர.
ரசித்தேன்.
ஏமாறுவது நம் தவறுமல்ல..
ஏமாற்றுவது அவர்கள் தவறுமல்ல..
யாசகனாய் இருத்தல் தவறென்கிறேன்
supper line logu..
\\ Chitra said...
எந்த பூக்களுமே
இயல்புகள் அற்று அறியாமல்
பூப்பதில்லை..
ஆசைகளை தவிர.
...the best! Super! :-)\\
உண்மைதாங்க..
நன்றிங்க சித்ரா.
\\ karthikkumar said...
kalakkureenga maams....:))
\\
ஹி..ஹி..
மாம்ஸூ..மாம்ஸூ..
\\ கீதா மதிவாணன் said...
எல்லாம் அறிந்தும்சிதறடிக்கிறாய் மனதை.தட்டுத்தடுமாறி கண்டெடுத்துஒன்றென சேர்க்கமீண்டும் உன்னிடமே வந்துகாதல் என்கிறது
ரசனை மிக்க வரிகள். ரசிக்கவைத்த வரிகள். சற்றே வலிமறைத்த வலிகளும் கூட.
அழகிய கவிதை\\
நன்றிங்க கீதா மதிவாணன்
\\ ஹேமா said...
இயல்புகள் அற்ற பூக்கள்,கொன்று பரிசோதித்தல் மனதில் நிற்கிறது லோகு.ஆனால் காதலை உணர்ந்து எழுதுவது உங்களத் தாண்ட யாருமில்லை !\\
நாங்கலாம் இன்னும் புள்ள பூச்சிங்கதானுங்க..
\\ ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
ரசனை...அருமை!!\\
நன்றிங்க ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி.
Post a Comment