Mar 23, 2011

கருவறுந்த இதயங்கள்

மறுக்கப்பட்ட போதும்
மறக்க நினைப்பதில்லை ஒருபோதும்..
கருவறுந்த இதயங்கள்.
****************************

வழியில்லா இடத்தில்
வருகையை எதிர்பார்ப்பது போல
மனசில்லா இடத்தில்
மயக்கங்களை எதிர்பார்த்தவனாகினேன்..
ஏற்றுகொள்ள மறுக்கும் மனசு
ஊமையாய் அழுது அடம்பிடிக்கிறது.
பாரங்கள் கரையாது என தெரிந்தும்.
***********************************

சமயங்களில் இறப்புகள் கூட
இயல்பாய் இருக்கின்றன..
இழப்புகள் இருப்பதில்லை ஒருபோதும்..
காணும் காட்சிகளும்
கிடைக்கும் தனிமைகளும்
கரையும் இரவுகளும்
விடியும் பொழுதுகளும்
முட்களென தாங்கி நிற்கின்றன.
உன் நினைவுகளை.
********************************

பறிக்கப்படுவதே சோகம் எனும்போது
அந்த பூக்கள் பூஜைக்கு போனாலென்ன..
கல்லறைக்கு போனாலென்ன..
உணர்விழந்த வாழ்க்கையும்
பறிக்கப்படும் பூக்களும்
ஒன்றென்றுதான் தோன்றுகிறது.
********************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

14 comments:

karthikkumar said...

nice......:))

சுசி said...

பறிக்கின்ற பூக்கள் :((((

ஹேமா said...

லோகு...காதல் கரு சாகும்வரை அறுக்கப்படுவதில்லை.அது மனதோடு !

logu.. said...

\\ karthikkumar said...
nice......:))\\

வாங்க மாம்ஸூ..

logu.. said...

\\ சுசி said...
பறிக்கின்ற பூக்கள் :((((\\


வருகைக்கு நன்றிங்க சுசி.

logu.. said...

\\ ஹேமா said...
லோகு...காதல் கரு சாகும்வரை அறுக்கப்படுவதில்லை.அது மனதோடு !\\

உண்மைதாங்க..
சாகும்வரை அறுக்கப்படுவதில்லை..

Pranavam Ravikumar said...

Lovely post..! I liked the second one. Thanks for sharing.

Chitra said...

பறிக்கப்படுவதே சோகம் எனும்போது
அந்த பூக்கள் பூஜைக்கு போனாலென்ன..
கல்லறைக்கு போனாலென்ன..
உணர்விழந்த வாழ்க்கையும்
பறிக்கப்படும் பூக்களும்
ஒன்றென்றுதான் தோன்றுகிறது.


......வித்தியாசமான கருத்துடன் இந்த கவிதை இருக்கிறது.

logu.. said...

\\ Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...
Lovely post..! I liked the second one. Thanks for sharing.
\\

Thanks for your first visit.

logu.. said...

\\ Chitra said...
பறிக்கப்படுவதே சோகம் எனும்போது
அந்த பூக்கள் பூஜைக்கு போனாலென்ன..
கல்லறைக்கு போனாலென்ன..
உணர்விழந்த வாழ்க்கையும்
பறிக்கப்படும் பூக்களும்
ஒன்றென்றுதான் தோன்றுகிறது.


......வித்தியாசமான கருத்துடன் இந்த கவிதை இருக்கிறது.\\

நன்றிங்க.. முதல் வருகைக்கும்.. பின்னூட்டத்திற்கும்.

Anonymous said...

//பறிக்கப்படுவதே சோகம் எனும்போதுஅந்த பூக்கள் பூஜைக்கு போனாலென்ன..கல்லறைக்கு போனாலென்ன..உணர்விழந்த வாழ்க்கையும் பறிக்கப்படும் பூக்களும்ஒன்றென்றுதான் தோன்றுகிறது//

எத்தனை சொல்கிறது இவ்வரிகள்... இரசிக்க தோன்றும் போதே வலி உடன் வருடுகிறது..

logu.. said...

\\ தமிழரசி said...
//பறிக்கப்படுவதே சோகம் எனும்போதுஅந்த பூக்கள் பூஜைக்கு போனாலென்ன..கல்லறைக்கு போனாலென்ன..உணர்விழந்த வாழ்க்கையும் பறிக்கப்படும் பூக்களும்ஒன்றென்றுதான் தோன்றுகிறது//

எத்தனை சொல்கிறது இவ்வரிகள்... இரசிக்க தோன்றும் போதே வலி உடன் வருடுகிறது..\\

ரொம்ப நாளா காணோமே..
வாங்க..வாங்க..

கீதமஞ்சரி said...

சமயங்களில் இறப்புகள் கூட
இயல்பாய் இருக்கின்றன..
இழப்புகள் இருப்பதில்லை ஒருபோதும்..


வாழ்வின் வலியுளிகள் அழகாய் செதுக்கிச் செல்கின்றன மனச்சிற்பங்களை. மனதை தொட்ட வரிகள், லோகு.

logu.. said...

\\ கீதா மதிவாணன் said...
சமயங்களில் இறப்புகள் கூட
இயல்பாய் இருக்கின்றன..
இழப்புகள் இருப்பதில்லை ஒருபோதும்..


வாழ்வின் வலியுளிகள் அழகாய் செதுக்கிச் செல்கின்றன மனச்சிற்பங்களை. மனதை தொட்ட வரிகள், லோகு.\\

நன்றிங்க..
முதல் வருகைக்கு