Dec 27, 2010

எனக்கான ஒரு மனம்.






எதேச்சையாய் கரம் பற்றி இழுக்கும்போது
எதிர்பாராமல் உடைந்த கைவளையை பார்த்து
"ப்ச்..போச்சே.." என்றதற்கு..
"விடு..விடு..
சேலைன்னா கசங்கணும்
வளையல்னா உடையணும் "
என்று சொல்லி சத்தமில்லாமல்
உடைக்க ஆரம்பிக்கிறாய் என் வயதை.
******************************************
தென்றல் கூட வழக்கத்திற்கு மாறாய்
கோக்குமாக்காக வீசுகிறது..
உன் முந்தானை வாசம் திருடிய கிறக்கத்தில்.
எப்போதும் உன் வாசம் மட்டுமே பற்றிகொள்ளும்
என் காதல் மட்டும் சும்மாவா இருக்கும்?
**************************************
எதேச்சையாய் ஆற்றங்கரையோரம் வந்த
உன்னை பார்த்து இரு மீன்கள் பேசிக்கொண்டன.
" அட.. நம் இனம் தண்ணீருக்கு வெளியேயும்
வாழ முடிகிறதே.."
கேட்டதும் நான் மெல்ல புன்னகைத்தேன்.
நீ கொஞ்சமே கொஞ்சமாய் வெட்கப்பட்டாய்.
என் புன்னகையால் எதுவும் நிகழவில்லை.
ஆனால் உன் வெட்கத்தால் மெல்லமாய்
சிவக்க ஆரம்பித்தது அந்தி வானம்.
********************************************
"எல்லோருக்கும் ஒரு மனம்
எனக்கென்று ஒரு மனமும் வைத்திருப்பதில்
தவறில்லைதான்..
ஆனால் அதை என் சொல்பேச்சு
கேட்க விட்டால் குறைந்தா போய்விடுவாய் ?"
"ஐ.. அஸ்கு புஸ்கு.."
பழிப்பு காட்டிக்கொண்டே ஓட ஆரம்பித்தாய்.
ஹய்யோ.. இன்னும் கொஞ்ச நேரமேனும்
இங்கேயே இரேன்..
எனக்கான அந்த மனம் உன் வெட்க்கத்திடமோ
அல்லது அது சார்ந்த எதோ ஒன்றிடம்
மன்றாடிகொண்டிருப்பதாய் படுகிறது எனக்கு.
...........................................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.


18 comments:

Arun Prasath said...

நல்லா இருக்கு பாஸ்

karthikkumar said...

உன் வெட்க்கத்திடமோ
அல்லது அது சார்ந்த எதோ ஒன்றிடம்
மன்றாடிகொண்டிருப்பதாய் படுகிறது எனக்கு// nice lines :)

Anonymous said...

ஒரே தென்றல் காற்றா இருக்கே கவிதை லோகு..

gayathri said...

ella kavithaium nalla iurkuga

மாணவன் said...

//எதேச்சையாய் கரம் பற்றி இழுக்கும்போது
எதிர்பாராமல் உடைந்த கைவளையை பார்த்து
"ப்ச்..போச்சே.." என்றதற்கு..
"விடு..விடு..
சேலைன்னா கசங்கணும்
வளையல்னா உடையணும் "
என்று சொல்லி சத்தமில்லாமல்
உடைக்க ஆரம்பிக்கிறாய் என் வயதை//

ம்ம்ம்... நடத்துங்க நடத்துங்க

நல்லாருக்கு...

Unknown said...

உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

புதுவருட வாழ்த்துக்கள் லோகு...

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

//" அட.. நம் இனம் தண்ணீருக்கு வெளியேயும்
வாழ முடிகிறதே.."
கேட்டதும் நான் மெல்ல புன்னகைத்தேன்.
நீ கொஞ்சமே கொஞ்சமாய் வெட்கப்பட்டாய்.
என் புன்னகையால் எதுவும் நிகழவில்லை.
ஆனால் உன் வெட்கத்தால் மெல்லமாய்
சிவக்க ஆரம்பித்தது அந்தி வானம்///

ஹ்ம்ம்......

வெட்கத்தை அந்தி வான செம்மைக்கு ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறேன்...
ஆனால் வெட்கத்தால்... அந்தி வானம் சிவந்த்ததை இன்று தான் பார்க்கிறேன்....

நல்ல பகிர்வு.... தேங்க்ஸ்.. :-)

தமிழ்த்தோட்டம் said...

மிகவும் அருமையா இருக்கு

Unknown said...

எதேச்சையாய் கரம் பற்றி இழுக்கும்போது
எதிர்பாராமல் உடைந்த கைவளையை பார்த்து
"ப்ச்..போச்சே.." என்றதற்கு..
"விடு..விடு..
சேலைன்னா கசங்கணும்
வளையல்னா உடையணும் "
என்று சொல்லி சத்தமில்லாமல்
உடைக்க ஆரம்பிக்கிறாய் என் வயதை.


எதேச்சையாய் ஆற்றங்கரையோரம் வந்த உன்னை பார்த்து இரு மீன்கள் பேசிக்கொண்டன." அட.. நம் இனம் தண்ணீருக்கு வெளியேயும் வாழ முடிகிறதே.."கேட்டதும் நான் மெல்ல புன்னகைத்தேன்.நீ கொஞ்சமே கொஞ்சமாய் வெட்கப்பட்டாய்.என் புன்னகையால் எதுவும் நிகழவில்லை.ஆனால் உன் வெட்கத்தால் மெல்லமாய் சிவக்க ஆரம்பித்தது அந்தி வானம்.////////////////

ரொம்ப நல்லா இருக்கு :)

logu.. said...

Nanringa arun..

logu.. said...

ha..ha... nanringa karthik..

logu.. said...

nanringa tami, gayathiri

logu.. said...

ama.. ama.. athukuthane..

boss .. nanringa manavan.

logu.. said...

\\ இனியவன் said...
உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!\\
\\ பிரஷா said...
புதுவருட வாழ்த்துக்கள் லோகு...\\

Nanringa..
Tooooooooooooooooooo
latethan....

irunthaalum solren..
wish u hpy nw yr..

logu.. said...

nanringa ananthi..

logu.. said...

nanringa tamilthottam & JJ

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Very nice... unarvugalai alagaai pradhipalikkum varigal