Dec 14, 2010

ஹய்யோ..வெட்கம்.

நீ அணிந்திருக்கும்வரைதான் என்றில்லாமல்
களைந்தெறிந்த பின்பும் உன் வெட்கங்களை
பூசிக்கொண்டு ஜொலிக்கும்
உன் உடைகளை போல்தான்..
நீ முத்தமிட்டு சென்றபின்பும்
அந்த சுவடுகளினூடே நின்றுகொண்டு
திரும்ப வரமாட்டேனென்று
அழிச்சாட்டியம் செய்கிறது மனசும்.
*********************************************
எப்போதெல்லாம் உன்னோடு
பேசிக்கொண்டிருக்கிறேனோ அப்போதெல்லாம்
என் நேரங்கள் போவதே தெரிவதில்லை என்கிறாய்.
அடி பாவி.. நானா உன் நேரங்களை
திருடுகிறேன்.. அந்த வேலையை
உன் வெட்கங்கள்தனே செய்கின்றன என்றதற்கு..
அதற்கும் காரணம் நீதானே என்கிறாய்
வெட்கப்பட்டுக்கொண்டே.
**********************************************
" இந்த மருதாணியை பாரேண்டா..
எவ்வளவு அழகாய் சிவந்திருக்கு..
இப்டி சிவந்து நா பாத்ததே இல்லடா.."
" ம்ம்.. நல்லாதானிருக்கு..
ஆனா இதவிட அழகா சிவந்ததைஎல்லாம்
நா பாத்திருக்கேனே.."
"இன்னும் சிவக்குமா?
எங்க பாத்த?"
" உன் கன்னத்துலத்தான்..
ஒருமுறை வெட்கப்பட்டு காட்டேண்டி.."
.
.
" ஏய்.. நா ஒருமுறைதானே சொன்னேன்..
அதுக்குள்ள ஒரு வெட்க்ககுளியலே நடத்திட்ட?"
"ஏய்.. சும்மா இருடா.."
ம்ம்.. எங்கிருந்துதான் வருமோ
இந்த பெண்களுக்கு மட்டும்.
************************************
எதிரே வரும் என்னை பார்த்ததும்
உன் கண்கள் சிரிப்பது இயல்புதான்..
அனால் உன் கைகள் உடைகளை
சரி செய்கின்றனவே ஏன்?
மறைக்கிறையா.. இல்லை ஞாபகம் செய்கிறாயா?
*********************************************
என்னிடம் மிகப்பிடித்தது
என்னவென்று கேட்டாய்..
அதெல்லாம் சொல்லக்கூடாதது
என்று சொன்னதற்கு
முறைத்தால் என்னடி நியாயம்?
****************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

26 comments:

Anonymous said...

வடை

Anonymous said...

அப்பாடா.. வடை வாங்கியாச்சு..
இருங்க படிச்சிட்டு வரேன்

Anonymous said...

அழிச்சாட்டியம் பண்ணும் மனசும்
நேரத்தைத் திருடும் வெட்கமும்
சிவந்த கண்ணமும்
வெட்கக்குளியலும்
உடை சரிபண்ணும் கைகளும்
முறைக்கும் கண்களும்


அட அட அட
அருமையோ அருமை

karthikkumar said...

வெட்கம் இவ்வளவு அழகா உணர வெச்சுடீங்க.

logu.. said...

vada vangurathula enna oru santhosam?

Nanringa inthira..

logu.. said...

ha..ha.. vetkamnale arumaithane..
Nanringa karthik..

gayathri said...

un kavithaiya padikanuma vekka pattute than padikanum pola iruke

சுசி said...

ஆஹா.. சூப்பர் வெக்கமா இருக்கே.. அசத்துங்க லோகு.

sakthi said...

சூப்பர்ப்ப்ப்ப்ப்ப்ப்

ஹேமா said...

காதலின் அழகே வெட்கம்தான்.

ஆணுக்கும் வெட்கம் வருமெல்லோ.அப்போ!

logu.. said...

\\ gayathri said...
un kavithaiya padikanuma vekka pattute than padikanum pola iruke\\

Ada gayathiri..
romba nalaikapram attendance potrukkey..

varuga..varuga..

logu.. said...

\\ சுசி said...
ஆஹா.. சூப்பர் வெக்கமா இருக்கே.. அசத்துங்க லோகு.\\

ha..ha... nanringa susi..

logu.. said...

\\ sakthi said...
சூப்பர்ப்ப்ப்ப்ப்ப்ப்\\


Nanringa sakthi...

logu.. said...

\\ ஹேமா said...
காதலின் அழகே வெட்கம்தான்.

ஆணுக்கும் வெட்கம் வருமெல்லோ.அப்போ!\\


Hayyoda..ipdi onnu irukka..
nanringa hema..

Anonymous said...

காதல் வழியும் வரிகள்...குறும்புடன் :) ரசித்தேன்..

Arun Prasath said...

என்னமா உருகி உருகி லவ் பண்றாங்க.. ஹ்ம்ம் பொறாமையா இருக்கு.... நமக்கு ஒன்னும் இப்டி தோணலயேன்னு

Anonymous said...

//Hayyoda..ipdi onnu irukka..//

http://raadhaiyinnenjame.blogspot.com/2010/09/2.html

இதில் நான்காவது கவிதை :)

logu.. said...

\\ ராதை/Radhai said...
காதல் வழியும் வரிகள்...குறும்புடன் :) ரசித்தேன்..\\

Nanringa rathai..
Muthal varugaikum..rasippukkum.

செல்வா said...

/பூசிக்கொண்டு ஜொலிக்கும்
உன் உடைகளை போல்தான்..
//

வாய்ப்பே இல்லைங்க ..!! செம செம .. ரொம்ப பிடிச்சிருக்கு ..!!

செல்வா said...

//." ஏய்.. நா ஒருமுறைதானே சொன்னேன்..அதுக்குள்ள ஒரு வெட்க்ககுளியலே நடத்திட்ட?""ஏய்.. சும்மா இருடா.."ம்ம்.. எங்கிருந்துதான் வருமோஇந்த பெண்களுக்கு மட்டும்./

ஹய்யோ ..!! எப்படிங்க இப்படியெல்லாம் உண்மைலேயே கலக்கல் .!!

logu.. said...

\\ கோமாளி செல்வா said...
/பூசிக்கொண்டு ஜொலிக்கும்
உன் உடைகளை போல்தான்..
//

வாய்ப்பே இல்லைங்க ..!! செம செம .. ரொம்ப பிடிச்சிருக்கு ..!!\\

ha..ha...athukuthane macha.. kadai potrukkom..

Nanringa selva..
muthal varugaiku.

சிவகுமாரன் said...

அழகான காதல் அருமையான கவிதைகள்

அருண் பிரசாத் said...

படங்களின் தேர்வும்... அதற்க்கான கவிதைகளும் கலக்கல்... இனி தொடர்ந்து வரேன்...

வாழ்த்துக்கள்

logu.. said...

Nanringa sivakumaran & Arunprasath..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமையான கவிதைகள்...

கவிநா... said...

ம்ம்ம்...இயல்பான நடையில், அழகான வெட்கங்கள்.. இல்ல இல்ல கவிதைகள்...