May 17, 2011

வார்த்தைகள்..

பொருளற்று பிறந்திருந்தாலும்
மிக பொறுமையாய்
அலைந்து கொண்டிருக்கின்றன
என் வெளியெங்கும்
தீராத ஏக்கங்களோடு..

மணிக்கணக்கில்
பேசிய பின்பும்
போகும்போது இன்னும்
ஏதோ மீதமிருப்பதை
போல தோன்றும்..
இப்போதும் தோன்றுகிறது..
நம் உறவுகள் முடிந்துவிட்டன
என தெரிந்தும்..
இன்னும் கொஞ்சம்
அழுத்தமாகஅல்லது ஆழமாக
பேசியிருக்கலாம்தான்..

கொஞ்சம் சண்டையாக
நிறைய்ய கவிதையாக
மாற தெரிந்ததற்கு
முட்களாக மாற
தெரிந்திருந்ததில்
வியப்பேதும் இல்லை..


எதற்கும் கவனமாய் இரு.
ஒரு வேளை உன்னிடத்திலும்
சுயங்கள் திருட முயற்சிக்கலாம்..
உனக்கும் எனக்குமாய்
பிறந்து தற்கொலை செய்துகொண்ட
வார்த்தைகள்.
***********************************

12 comments:

karthikkumar said...

யோவ் மாம்ஸ் வூர விட்டு ஓடி போறேன் சொல்லி ''நண்பர்களுக்கு நன்றி'' அப்டின்னு ஒரு பதிவு போட்டுட்டு இது என்ன இருபது நாள்லயே திரும்பி வந்துட்டீங்க....:))

Chitra said...

உனக்கும் எனக்குமாய்
பிறந்து தற்கொலை செய்துகொண்ட
வார்த்தைகள்.


..... ரொம்ப அருமையாக எழுதி இருக்கீங்க. பாராட்டுக்கள்!

ரேவா said...

எதற்கும் கவனமாய் இரு.
ஒரு வேளை உன்னிடத்திலும்
சுயங்கள் திருட முயற்சிக்கலாம்..
உனக்கும் எனக்குமாய்
பிறந்து தற்கொலை செய்துகொண்ட
வார்த்தைகள்.

நலமா நண்பரே....கவிதையில் சோகத்தோடும், கோபத்தோடும் சுயம் தொலைக்கும் வார்த்தைகள் பற்றி அழகாய் கவிதை அமைத்துள்ளீர்கள்...ரசித்தேன்

ஹேமா said...

லோகு...சுகம்தானே !

காதலின் வேதனைகள் இருந்தாலும் வார்தைகளில் காதல் விளையாட்டு !

சுசி said...

//
எதற்கும் கவனமாய் இரு.
ஒரு வேளை உன்னிடத்திலும்
சுயங்கள் திருட முயற்சிக்கலாம்..
உனக்கும் எனக்குமாய்
பிறந்து தற்கொலை செய்துகொண்ட
வார்த்தைகள்.
//

செம..

logu.. said...

\\
karthikkumar said...
யோவ் மாம்ஸ் வூர விட்டு ஓடி போறேன் சொல்லி ''நண்பர்களுக்கு நன்றி'' அப்டின்னு ஒரு பதிவு போட்டுட்டு இது என்ன இருபது நாள்லயே திரும்பி வந்துட்டீங்க....:))\\

உங்கள எல்லாம் அவ்ளோ சீக்கிரத்துல விட்ருவமா?
கொல பண்ணாம கடைய காலி பண்ண மாட்டோமடி மாம்ஸூ..

logu.. said...

\\ Chitra said...

..... ரொம்ப அருமையாக எழுதி இருக்கீங்க. பாராட்டுக்கள்!\\

நன்றிஙக சித்ரா.

logu.. said...

\\ ரேவா said...

நலமா நண்பரே....கவிதையில் சோகத்தோடும், கோபத்தோடும் சுயம் தொலைக்கும் வார்த்தைகள் பற்றி அழகாய் கவிதை அமைத்துள்ளீர்கள்...ரசித்தேன்\\

ம்ம்.. நலம்தான் நண்பரே..
உங்களிடம் ரசனைக்கா பஞ்சம்?

logu.. said...

\\ ஹேமா said...
லோகு...சுகம்தானே !

காதலின் வேதனைகள் இருந்தாலும் வார்தைகளில் காதல் விளையாட்டு !\\

சுகம்தான்..
சமயங்களில் எல்லாமே விளையாட்டாய் ஆகிறது.
நன்றிங்க ஹேமா.

logu.. said...

\\ சுசி said...
//
எதற்கும் கவனமாய் இரு.
ஒரு வேளை உன்னிடத்திலும்
சுயங்கள் திருட முயற்சிக்கலாம்..
உனக்கும் எனக்குமாய்
பிறந்து தற்கொலை செய்துகொண்ட
வார்த்தைகள்.
//

செம..


ஹி..ஹி.. கலக்கல்.

கீதமஞ்சரி said...

அங்குமிங்கும் அலையும் வார்த்தைகளை சுயம் திருடுமுன்னே தொகுத்து அழகுக் கவிதையாக்கிவிட்டீர்கள். மனதின் ஆழம் வரைப் பாயும் ஈட்டிகளாய் கவி வார்த்தைகள்.

gayathri said...

மணிக்கணக்கில்
பேசிய பின்பும்
போகும்போது இன்னும்
ஏதோ மீதமிருப்பதை
போல தோன்றும்..
இப்போதும் தோன்றுகிறது..
நம் உறவுகள் முடிந்துவிட்டன
என தெரிந்தும்..
இன்னும் கொஞ்சம்
அழுத்தமாகஅல்லது ஆழமாக
பேசியிருக்கலாம்தான்..

eno enakakave ezuthiyathai ponra oru unarvu