கனவுகள் அவரவர்
சொந்த உரிமையாம்..
அவற்றைகூட திருடி கொள்ள
உன்னால் மட்டும்தான் முடிகிறதடி.
************************
”நல்லா சாப்ட்டு சீக்கிரம்
குண்டாகுனா கேக்கவே மாட்டியா நீ?”
“ஏன்.. நா குண்டானா உனக்கென்ன?”
“ஹி..ஹி.. குண்டானா இடுப்புல
ஏதோ மடிப்பு விழுமாம்ல..
அங்கதான் வீடு கட்டி
குடித்தனம் பண்ணுவேன்னு
அடம் புடிக்குது மனசு..”
“அய்..அஸ்கு.. புஸ்கு.. ஆசைய பாரு”
பழிப்பு காட்டியதில்
பல்லாங்குழி ஆடுதடி அதே மனசு.
***************************
இனிமேல் சேலையெல்லாம்
கட்டவே கட்டாதே..
உன் எல்லா அழகையும்
தானே திருடி வைத்து கொள்(ல்)கிறது
கர்வம் பிடித்த சேலை.
********************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.
8 comments:
nice. :-)
:))
பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் உங்கள் காதலில் !
ஓ.. இதான் பல்லாங்குழியா.. :)
//கனவுகள் அவரவர்
சொந்த உரிமையாம்..
அவற்றைகூட திருடி கொள்ள
உன்னால் மட்டும்தான் முடிகிறதடி.//
Supper sago
இனிமேல் சேலையெல்லாம்கட்டவே கட்டாதே..உன் எல்லா அழகையும்தானே திருடி வைத்து கொள்(ல்)கிறதுகர்வம் பிடித்த சேலை
நல்லா இருக்கே..
கனவுகளைக் கைப்பற்றிய காதல் அழகு.காதல் நிரம்பி வழிகிறது ஒவ்வொரு கவிதையிலும்.
படங்களும் பதிவும்
மிகச் சிறப்பாக உள்ளன
(சிறப்பாக சொல்வதற்கு ஏதுமில்லை என
நீங்களாக சொல்லிகொண்டபோதிலும்)
மனங்கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Post a Comment