Nov 19, 2010

வசிய பிசாசு.

இப்பொழுதெல்லாம் என் காதலோடு
என் பொழுதுகளும் என்னை
கெஞ்ச ஆரம்பித்து விட்டன.
எப்பொழுதும் உன்னுடனே இருக்க சொல்லி..
சரியான வசிய பிசாசுடீ நீ.
********************************************
வேணாம்..வேணாமென
வாங்க நினைக்கிறாய்..
வேணும்..வேணுமென்றால்
தர மறுக்கிறாய்..
ஏனடி முத்தங்களில் மட்டும் இப்படி
முரண்பட்டு மூச்சடைக்க வைக்கிறாய்?
********************************************
கடந்து செல்லும் ஐஸ்கிரீம் வண்டியின்
மணிச்சத்தத்தை கேட்டுகொண்டே
பின்னோக்கி செல்லும் சிறுவனின்
மனதைபோல்தான்..
கடந்து செல்லும் உன்
முந்தானை வாசத்தை பற்றிக்கொண்டு
உன்னுடனே வந்துவிடுகிறது
என் மனசும்.
***********************************
தேவதைகள் ஊஞ்சலாடுவதை
பார்க்க ரொம்ப அழகாக இருக்குமாம்..
ஒருமுறை எனக்கு ஊஞ்சலாடி
கட்டுகிறாயாடீ செல்லம்.
************************************
கைகளில் மருதாணி வைத்திருக்கிறாயே
சேலை நான் கட்டி விடட்டுமா என
கேட்டதற்கு ஏனடி இப்படி முழிக்கிறாய்?
இன்னும் போக போக என்னவெல்லாமோ
கேட்பேனே அப்போது என்ன செய்வாய்?
*******************************************

எதுவுமே கொடுக்க கொடுக்க

குறைந்துகொண்டேதான் வரும்.

நம் காதலில் முத்தங்கள் மட்டும்

அதிகரித்துக்கொண்டே வருகின்றனவே.

********************************************

ப்ரியமுடன்..
லோகநாதன்.

17 comments:

சிவகுமாரன் said...

அழகு அழகு
மறுபடியும்(?) காதலிக்க தோணுதையா

logu.. said...

ha..ha.. nanringa tholareyy..

sakthi said...

வேணாம்..வேணாமென வாங்க நினைக்கிறாய்..வேணும்..வேணுமென்றால் தர மறுக்கிறாய்..ஏனடி முத்தங்களில் மட்டும் இப்படி முரண்பட்டு மூச்சடைக்க வைக்கிறாய்?

அய்யோ லோகு அசத்தறே

ஹேமா said...

காதலின் எண்ணங்களும்,
கற்பனைகளும் கொடுக்கக் கொடுக்கத் தீராத முத்தங்கள் போல...
லோகு அசத்துறீங்க !

போளூர் தயாநிதி said...

//எதுவுமே கொடுக்க கொடுக்க

குறைந்துகொண்டேதான் வரும்.

நம் காதலில் முத்தங்கள் மட்டும்

அதிகரித்துக்கொண்டே வருகின்றனவே.

********************************************//
nalla aakkam
parattugal
polurdhayanithi

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

வாவ்.. எல்லா குட்டிக் கவிதையும் சூப்பர்.. :-))

(அந்த மருதாணி கவிதைக்கு...ஒரு மருதாணி கரங்கள் கொண்ட பெண் படம்... கிடைக்க வில்லையா?? :D )

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...
This comment has been removed by the author.
logu.. said...

ha..ha.. nanringa sakthi..

logu.. said...

amanga hema..

enna pannalum theerave illeeyyy

logu.. said...

Nanringa polurdhayanithi..

muthal murai vanthirukeenga..

logu.. said...

Nanringa polurdhayanithi..

muthal murai vanthirukeenga..

logu.. said...

ha..ha.. nanga enna padam vechutu podama vanjanaiya panrom?

iruntha poda mattoma?
Nanringa ananthi.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அசத்துறீங்க..தொடருங்கள்.. அருமை.. வாழத்துக்கள்

logu.. said...

anringa prasha..

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

http://www.google.com/imgres?imgurl=http://1.bp.blogspot.com/_mmBw3uzPnJI/S3lQo8iW1RI/AAAAAAABCto/T3uCPmI7KDM/s400/Mehndi_Designs_01.jpg&imgrefurl=http://damncoolpics.blogspot.com/2010/02/mehndi-tattoo-designs.html&usg=__B3ZSf_E5KxHMv1gXhsS1nB35ryU=&h=398&w=400&sz=75&hl=en&start=224&sig2=t_dK6c5wwt-znpEjKCwQUQ&zoom=1&tbnid=DZfLrXR1DCS_aM:&tbnh=146&tbnw=147&ei=fYf6TJPLMNGenwfAnKHJCg&prev=/images%3Fq%3Dmehndi%26um%3D1%26hl%3Den%26sa%3DX%26biw%3D1186%26bih%3D639%26tbs%3Disch:10%2C6930&um=1&itbs=1&iact=hc&vpx=463&vpy=326&dur=133&hovh=192&hovw=193&tx=164&ty=135&oei=moT6TNjHCcPKnAfQrvXICg&esq=14&page=14&ndsp=18&ved=1t:429,r:14,s:224&biw=1186&bih=639

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

Oru maruthani pennin picture...link pottaen..

logu.. said...

Hayyo.. super padamnga..

nallarukku.
Nanringa ananthi.