மிக அழகாய் பிறந்திருந்தும்
தனிமையில் தேயும் நிலவை போல்தான்
அநாதையாய் கிடக்கின்றன..
உன்னால் களைந்தெறியப்பட்ட
என் ப்ரியங்கள்.
எட்ட முடியா ஏகாந்தமென
தெரிந்திருந்தும்
'தேவதைகளின் தேவதை' என
செல்லம் கொஞ்சிய அரளிபூக்கள் அவை.
வார்த்தைகள் இல்லா
பயணத்தில் உன் நினைவுகளாய்
உருமாறி கொல்லும்
வன்கவிதைகள் அவை..
தூக்கமில்லா பின்னிரவுகளின் நீட்சியில்
முட்களாய் மாறி இதயத்தை வலிக்க செய்து
ரசித்து விழுங்கும் கொடுந்தீ ..
ஆனாலும் வார்த்தைகளால்
அவ்வப்போது காயங்கள் செய்ய
மட்டுமே முடிகிறது உன்னால்..
அவற்றை கொலை செய்ய
உனக்கும் தெரியவில்லை..
அவற்றுக்கும் தற்கொலை
செய்துகொள்ள தெரியவில்லை..
என்ன செய்ய நான்?
..............................................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.
தனிமையில் தேயும் நிலவை போல்தான்
அநாதையாய் கிடக்கின்றன..
உன்னால் களைந்தெறியப்பட்ட
என் ப்ரியங்கள்.
எட்ட முடியா ஏகாந்தமென
தெரிந்திருந்தும்
'தேவதைகளின் தேவதை' என
செல்லம் கொஞ்சிய அரளிபூக்கள் அவை.
வார்த்தைகள் இல்லா
பயணத்தில் உன் நினைவுகளாய்
உருமாறி கொல்லும்
வன்கவிதைகள் அவை..
தூக்கமில்லா பின்னிரவுகளின் நீட்சியில்
முட்களாய் மாறி இதயத்தை வலிக்க செய்து
ரசித்து விழுங்கும் கொடுந்தீ ..
ஆனாலும் வார்த்தைகளால்
அவ்வப்போது காயங்கள் செய்ய
மட்டுமே முடிகிறது உன்னால்..
அவற்றை கொலை செய்ய
உனக்கும் தெரியவில்லை..
அவற்றுக்கும் தற்கொலை
செய்துகொள்ள தெரியவில்லை..
என்ன செய்ய நான்?
..............................................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.
15 comments:
அவற்றை கொலை செய்ய
உனக்கும் தெரியவில்லை..
அவற்றுக்கும் தற்கொலை
செய்துகொள்ள தெரியவில்லை..
என்ன செய்ய நான்?
அருமை லோகு வேறு என்ன சொல்ல அபாரமான வரியமைப்பு+ வலியை சொல்லும் கவி
இது காதலின் வலியாய் இருந்தாலும் கையாளப்பட்ட விதம் வார்த்தைகள் கோர்வை அருமை அருமை அருமை..சக்தி சொன்னது போலவே..பாராட்ட தெரியலை லோகு பொதுவாவே உன் கவிதையில் ஒரு ஈர்ப்பு இருக்கும் இது அழகாய் செதுக்கப்பட்ட சிலை...எல்லாராலும் ரசிக்கப்படும் கவிதை...
அருமை லோகு
//தூக்கமில்லா பின்னிரவுகளின் நீட்சியில்
முட்களாய் மாறி இதயத்தை வலிக்க செய்து
ரசித்து விழுங்கும் கொடுந்தீ ..///
தனிமை இரவுகளின் வெறுமைகளில் தகிக்கும் தீ பற்றி அருமையா சொல்லிருக்கீங்க..:-)))
//என்ன செய்ய நான்?//
விடை இல்லா கேள்விங்க.
Nanringa sathi..
valigalnale sugamthane..
rasippatharkuthane kavithai..
thodarnthu vareenga.
nanringa tamil..
nanringa nanbareyyyy
ungalapola varuma..?
nanringa ananthi.
hi..hi..
athu theriyamathane
ungala mathiri periya manusangalta ketom?
nanringa susi..
லோகு....சில வலிகளை நாங்களே வலியப் போய்த் தேடி எடுத்துக்கொள்கிறோம்.
அதிலும் ஒரு சுகம்தான் காதலில் !
அவற்றை கொலை செய்ய
உனக்கும் தெரியவில்லை..
அவற்றுக்கும் தற்கொலை
செய்துகொள்ள தெரியவில்லை..
என்ன செய்ய நான்?
naan என்ன செய்ய ?
வார்த்தைகள் கோர்வை அருமை... வாழ்த்துக்கள்...
//ஆனாலும் வார்த்தைகளால்
அவ்வப்போது காயங்கள் செய்ய
மட்டுமே முடிகிறது உன்னால்..
அவற்றை கொலை செய்ய
உனக்கும் தெரியவில்லை..
அவற்றுக்கும் தற்கொலை
செய்துகொள்ள தெரியவில்லை..//
வலி நிறைந்த வார்த்தைகள்
Nanringa Hema,
Nanringa Vinu,
Nanringa Prasha,
Nanringa Indira.
Post a Comment