இல்லையென உணரும்போது
கடந்துசென்ற நமக்கான
நேரங்கலனைத்தையும் மிகச்சிறப்பாய்
உணர்கிறது மனசு..
நமக்கான நேரங்களனைத்தும்
பெரும்பாலும் சண்டைகளாகவே
முடிந்திருந்தாலும்.
------------------------------------------------------------------
------------------------------------------------------------------
வருகின்றன மழை நாட்கள்..
கொஞ்சம் கவிதைகளையும்
நிறைய்ய நினைவுகளையும்
தாங்கிக்கொண்டு..
மனசில் மட்டும் ஏனோ
மனசில் மட்டும் ஏனோ
சந்தோசங்களுக்கு பதிலாய் வலிகள்.
-------------------------------------------------------------உதிர்ந்துவிட்ட வார்த்தைகளை
போல்தான் சில உறவுகளும்..
எவ்வளவுதான் தவமிருந்தாலும்
கைசேருவதே இல்லை
கடைசீவரை..
---------------------------------------------------
அடர்தனிமைகளில் பயணம் செய்யவே
நடுங்குகிறது மனசு.. வழியெங்கும்
உயிரை கொல்லும் உன் நினைவுகளும்
சுயங்கள் திருடும் உன் பிம்பங்களும்
மட்டுமே சிதறி கிடக்கின்றன.
.................................................................................
ப்ரியமுடன்...
லோகநாதன்.
14 comments:
கவிதைகள் அனைத்தும் கற்பூரமாய் சட்டென மனதில் பதிந்திட்டது..வலிகளை சுமந்த வார்த்தைகள் கவிதையில் மட்டும் இருக்க வாழ்த்துக்கள்...
mmm... nanringa tamil..
அற்புதம் லோகு சான்ஸே இல்ல
வலிகளையும் சுகமாக்கிப் பார்க்கிறது காதல்.என்ன செய்யலாம் லோகு
mmmhooo.. ungalavidava.. sakthi
onnume panna mudiyathunga hema..
sir eaan intha soga kavithai
naan itha etheir pakkave illaye
olunga next kavithai santhosama irukanum illana
pichiduven pechi raskal
aebutham arumai.... eppzhuthum polave un kavithayai vaarthaikkul adaka mudiyavillai.....
innum niraya ezhuthu logu..
Nallaa irukkunga.. :-))
பிரிவின் தூரல்
மனதை நனைத்த
மழை.......
இப்போதுதான் முதன்முதலில் இங்கு வருகிறேன். கவிதைகளும் படங்களுமாய் உங்கள் வலைப்பூவே ஒரு அருமையான கவிதையாகத் தெரிகிறது. வாழ்த்துக்கள்! மேலும் மேலும் எழுதுங்கள் நண்பரே!
nanringa gayathri, kavi, ananthi..
nanringa dinesh..
meendum varuga.
ha..ha.. vangov..vangov...
unga lavutuku koranjathuthangna rams..
Post a Comment