Sep 7, 2010

காதல் மகராணி..

பூக்களுக்கு பூக்கள்
நலம் விசாரிப்பது இயல்புதான்.
அதற்காக வரும்போதெல்லாம்
பூந்தோட்டத்திற்கு போகாதே நீ..
இந்த நடமாடும் செடியில்
எவ்வளவு அழகாய் இரண்டு பூக்கள்
இருக்கின்றன என்று பூக்களெல்லாம்
பொறாமைபடுகின்றன.
நம் உலகின் ஒவ்வொரு
நாளையும் மழை நாளாக
மாற்றி வைக்க போகிறேன் அல்லது
விடியாத இரவுகள் செய்து
வைக்க போகிறேன்..
உன் மனம் சாய்ந்து தூங்க.
உன்னுடனான
என் பயணங்கள் எல்லாமே
சுகமா என்று சொல்லதெரியவில்லை..
ஆனால் ஒவ்வொரு முறையும்
இத்தருணங்கள் சிறகு முளைத்து
பறந்துகொண்டே இருக்கவேண்டுமென்று
நினைப்பது நிஜம்.
நீ தலை சாய்த்து பேசுவதை
ரசிக்கவே தனியொரு உலகம்
செய்துவைக்கபோகிறேன்..
அங்கே மிக முக்கியமாய்
கடிகாரம் இல்லை.. காலம் இல்லை..
இதுவரை உன்னருகே இருக்கும்போது
எனக்கு மட்டுமே மாறமலிருந்த காலம்
இனி இருவருக்குமே..
யாருமற்ற தெருவில்
உன் வாசம் பற்றி நடக்கும்போது
எதேச்சையாய் எட்டி முத்தமிட..
'ஹ்ய்யூ.. யாராவது பார்த்தால்
என்னாவது?'
பூக்களாய் வெடிக்கிறாய்..
நம் காதல் கைகட்டி
ரசித்துக்கொண்டிருப்பதை அறியாமல்.
.............................................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.

12 comments:

ஹேமா said...

லோகு...காதல் சொட்டச் சொட்ட அழகான படங்களோடு கவிதைகள்.ரசித்தேன்.

vinu said...

nalaaathaan irruku, ada nalla irrukkunga , ada nijamaathaan nalla irrukkungaaaaaaaaaa, nambungapaaaaaaaaaaaaaa

logu.. said...

Nanringa Hema.

Rasikkum manam irukkumvarai vazhkkai azhagai irukkum.

logu.. said...

nanringa vinu.. ada nanringa...
ada nijamaaaaalume solren nanringa.

gayathri said...

hi pa

azagana kavithai

neraya ezuthuga pa

kavitha said...

super poem

logu.. said...

Nanringa Gayathri, Kavi

Karthik Raja said...

supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

குட்டி குட்டி கவிதைகள் அழகா இருக்குங்க.. :-))
படங்களும் நல்லா இருக்கு...!!

venu said...

அழகான மிக அழகான ரசனை!
சொட்ட சொட்ட நனையும் காதல் :)
வாழ்துக்கள் தோழா!

எஸ்.கே said...

அழகான கவிதைகள்!

மதி said...

nice feeling and lines logu.. and tastefuly selected pictures too :-) good work