Sep 29, 2009

கண்மணிக்கு..

கவிதையாய்
என் நெஞ்சில்
வாசம் செய்கிறாய்..
ஆனால் நான்
ரசனைகள்
தொலைத்து நாட்கள்
மாதங்களாகி விட்டன.
..........................................
நாட்கள் மாதங்களாகலாம்..
மாதங்கள் வருடங்களாகலாம்..
அதனால் என்ன..
என் காதல்
குறைந்துவிடவா போகிறது..
காதலுக்கேது காலமும்.. நேரமும்..
....................................................
காலமும் நேரமும்
காத்திருக்க போவதில்லை
உனக்காக..
உனக்கான சொந்தங்கள்கூட
உனக்காய் கடைசீ வரை
காத்திருப்பதென்பது
இயல்புகள் மீறிய ஒன்றுதான்..
என் காதல் காத்திருக்க
ஆசைப்படுகிறது..
என் கல்லறைமீது
பூக்களாய் பூத்தேனும்.
...............................................
கல்லறை மீது
பூத்ததை தவிர
வேறென்ன பாவம் செய்தன
கல்லறை பூக்கள்..
கூந்தல் ஏறவும் முடியவில்லை..
பூஜைக்கு போகவும் முடிவதில்லை..
அப்படியே சில இதயங்களும்..
நேசம் வைத்த
பாவத்தை தவிர
வேறெந்த பாவமும்
அறியவில்லை என்றாலும்..
வாழவும் முடிவதில்லை..
சாகவும் முடிவதில்லை.
....................................................................

5 comments:

S.A. நவாஸுதீன் said...

கவிதை நல்லா இருக்கு லோகு

*********************

என் காதல் காத்திருக்க
ஆசைப்படுகிறது..
என் கல்லறைமீது
பூக்களாய் பூத்தேனும்.

வரிகளில் நன்று, வாழ்க்கையில்.......

ப்ரியமுடன் வசந்த் said...

அட முடிவு வரிகளில் தொடர்ச்சி அருமை

logu.. said...

\\கவிதை நல்லா இருக்கு லோகு

*********************

என் காதல் காத்திருக்க
ஆசைப்படுகிறது..
என் கல்லறைமீது
பூக்களாய் பூத்தேனும்.

வரிகளில் நன்று, வாழ்க்கையில்.......\\


Nanringa S.A.S..

logu.. said...

\\அட முடிவு வரிகளில் தொடர்ச்சி அருமை \\



Thanks Vasanth..

kavitha said...

என் காதல் காத்திருக்க
ஆசைப்படுகிறது..
என் கல்லறைமீது
பூக்களாய் பூத்தேனும்.


***என்னமா இருக்கு வரிகள் அவ்ளோ அருமை, இனிமை***

கல்லறை மீது
பூத்ததை தவிர
வேறென்ன பாவம் செய்தன
கல்லறை பூக்கள்..
கூந்தல் ஏறவும் முடியவில்லை..
பூஜைக்கு போகவும் முடிவதில்லை..
அப்படியே சில இதயங்களும்..




******வரிகள் இயல்பாய் இருந்தாலும் இதயத்தை தொட்டு தொட்டு செல்கிறது.... கருத்துச் சொல்ல வார்த்தைகள் இல்லை என்னிடம்... உணர்வாய் வரிகள் உள்ளுக்குள் சென்ற பின்னே.... *******




1000 கோடி வாழ்த்துக்கள் லோகு ....