Jul 9, 2009

உன்னை நினைத்தே..

உன் நினைவுகளினூடே
தேடிப்பார்க்கிறேன் என்னை..
எங்கும் தட்டுப்படவே
இல்லை நான்..
அடிபாவி..
இப்படியா முழுவதுமாய்
என்னை ஆட்கொள்(ல்)வாய் நீ..
...............................................................
இடரும்போதெல்லாம்
இதமாய் தாங்கி பிடிக்கும்
உன் ப்ரியங்களால்தான்
இன்னும் கொஞ்சமேனும்
நல்லவனாய் இருக்க
முடிகிறது என்னால்..
நன்றியடி பெண்ணே..
என்மீதான உன்
தொலைந்துபோன
பிரியங்களுக்கு.
..............................................
சோலையின்
சுகந்தமாய்..
தென்றலின்
வசந்தமாய்..
தனிமை
இனிமையாய்..
நெஞ்சின்
ரணமாய்..
வாழ்க்கையின்
ஆதாரமாய்..
இன்னும் எத்தனை
முகம் இருக்கும்..?
உன் நினைவுகளுக்கு.
................................................
பொன்னேரம் இந்நேரம்
பூங்காத்தும் தாலாட்ட..
பூவாசம் வந்தாட..
ராசாத்தி உன் நினைவால்..
என் மனதில் தேரோட்டம்.
......................................................
களவு
கற்று மற..
காதல்..
கற்றவுடன் இற.
................................
வசந்தம்
வரும்போதெல்லாம்
இயல்பாய்
செழித்திருக்கும்
சோலையை போல்தான்..
உன் நினைவுகள்
தொடும்போதெல்லாம்
தானாய் சில்லிடுகிறது
என் இதயம்.
...................................................

10 comments:

gayathri said...

nalla iruku

sakthi said...

இடரும்போதெல்லாம்
இதமாய் தாங்கி பிடிக்கும்
உன் ப்ரியங்களால்தான்
இன்னும் கொஞ்சமேனும்
நல்லவனாய் இருக்க
முடிகிறது என்னால்..
நன்றியடி பெண்ணே..
என்மீதான உன்
தொலைந்துபோன
பிரியங்களுக்கு.

அருமை லோகு

sakthi said...

வசந்தம்
வரும்போதெல்லாம்
இயல்பாய்
செழித்திருக்கும்
சோலையை போல்தான்..
உன் நினைவுகள்
தொடும்போதெல்லாம்
தானாய் சில்லிடுகிறது
என் இதயம்.

அற்புதம்

sakthi said...

களவு
கற்று மற..
காதல்..
கற்றவுடன் இற

நச் வரிகள்

சப்ராஸ் அபூ பக்கர் said...

////இடரும்போதெல்லாம்
இதமாய் தாங்கி பிடிக்கும்
உன் ப்ரியங்களால்தான்
இன்னும் கொஞ்சமேனும்
நல்லவனாய் இருக்க
முடிகிறது என்னால்..///

ரசனை மிக்க வரிகள்....

வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்....

அப்துல்மாலிக் said...

இந்த டெம்ப்ளேட் வெச்சிருக்கிறவங்களுக்கெல்லாம் கவிதையா கொட்டுமோ

ம்ம் நல்லாயிருக்கு உங்க நினைவுகள் லோகு

நானும் இந்த டெம்ப்ளேட் மாத்திரலாமானு யோசிச்சிக்கிட்டிருக்கேன்..அப்படியாவது கவிதை வருதானு பார்ப்போம் ஹா ஹா

நட்புடன் ஜமால் said...

களவு
கற்று மற..
காதல்..
கற்றவுடன் இற.\\

ஏன் ராஸா ஏன் ...

Mohan R said...

உன் நினைவுகளினூடே
தேடிப்பார்க்கிறேன் என்னை..
எங்கும் தட்டுப்படவே
இல்லை நான்..
அடிபாவி..
இப்படியா முழுவதுமாய்
என்னை ஆட்கொள்(ல்)வாய் நீ..

:):):) sooper :):):)

kavitha said...

உன் நினைவுகளினூடே
தேடிப்பார்க்கிறேன் என்னை..
எங்கும் தட்டுப்படவே
இல்லை நான்..

இடரும்போதெல்லாம்
இதமாய் தாங்கி பிடிக்கும்
உன் ப்ரியங்களால்தான் ........

......
.....
இன்னும் எத்தனை
முகம் இருக்கும்..?
உன் நினைவுகளுக்கு.

உன் நினைவுகள்
தொடும்போதெல்லாம்
தானாய் சில்லிடுகிறது
என் இதயம்.

kavitha said...

line by line a romba enjoy panni padichen.

romba nalla irukku logu
starting e super... rasanayana lines ellame