அன்புள்ள செல்லம்மாவுக்கு,
கவிதை நீ..
காகிதம் நான்..
நீ மட்டுமே நிரம்பியிருக்க
வேண்டிய என் பக்கங்களில்
இன்று என் கண்ணீர்த்துளிகள் மட்டுமே..
சோலை நான்..
சுகந்தம் நீ..
நீ மட்டுமே நிரம்பியிருக்க
வேண்டிய என் வெளியெங்கும்..
வெம்மையாய் என் ஏக்கங்கள் மட்டுமே..
உன் பிம்பம்
உன் புன்னகை..
உன் கொஞ்சல்..
உன் மிஞ்சல்..
எனக்கான உன் நேரங்கள்..
எல்லாவற்றையும் சேர்த்துவைக்கும்
ஒரு அற்புதமாய் இருந்தது
என் இதயம்..
எல்லாவற்றையும் ஒரே வார்த்தையால்
மீட்க முடியாமல் சிதறடிக்க முடிந்தது
உன்னால் மட்டும்?
தினம் காலை வந்து
மாலை மறைய
என் உலகின் சூரியனல்ல நீ ..
என் வானம்..
நொடிப்பொழுதும் மறையாமல்
என்னுடனே இருக்கணும் நீ..
இப்போதும் இருக்கிறாய்..
நிஜங்களாக அல்ல..
நினைவுகளாக..
அதற்காக உன் நிஜங்களை
திருடிக்கொள்ள விருப்பமில்லை எனக்கு..
ஆம் பெண்ணே..
கரைவது என் வாழ்க்கையானாலும்..
நிறைவது உன் மனமாக இருக்க வேண்டும்.
- இப்படிக்கு..
மறுபடியும்
கனவுகளை
தொலைத்தவன்.
.....................................................................................
18 comments:
me they 1st pa
innum padikkalala padichitu varen
எப்படிப்பா இப்படியெல்லாம் வெல்லாமாய் இனிக்கும் கவிதையில் கண்ணீர் வெள்ளமாய் தெரிகிறது...ம்ம்ம் கவிதைக்கு பொய் மட்டுமல்ல கண்ணீரும் அழகு தான்...எத்தனை அன்பு ஆத்மார்த்தமாய் ஆழமாய்.....கனவுகள் தொலையவில்லை தொலைதூரத்தில் இருக்கிறது....கனவு மெய்ப்படும் காரியம் கைக்கூடும்....சோகமாய் இருந்தாலும் சுவையாய் இனிக்கிறது இந்த காதல் கவி....
நினைவுகளையும் நிஜங்களாய் பாவிப்பது இயல்பான வாழ்க்கை, அருமை சொல்லிருக்கீர்ன்க்க லோகு
வாழ்த்துக்கள்
\\அதற்காக உன் நிஜங்களை
திருடிக்கொள்ள விருப்பமில்லை எனக்கு..
ஆம் பெண்ணே..
கரைவது என் வாழ்க்கையானாலும்..
நிறைவது உன் மனமாக இருக்க வேண்டும்.\\
மிகவும் அருமை லோகு!
இயல்பான விடயத்தை
இயல்பாக எடுத்து கொண்ட பாங்கு நலம், ஆரோக்கியம்.
உண்மையில் நாம் யார் மீது அன்பு வைத்துள்ளோமோ அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதே அந்த அன்பின் அடிப்படை.
அவர்கள் எங்கிருந்தாலும் சரியே
சோலை நான்..
சுகந்தம் நீ..
நீ மட்டுமே நிரம்பியிருக்க
வேண்டிய என் வெளியெங்கும்..
வெம்மையாய் என் ஏக்கங்கள் மட்டுமே..
ஏக்கத்தின் வெளிப்பாடு வார்த்தையாய்
தினம் காலை வந்து
மாலை மறைய
என் உலகின் சூரியனல்ல நீ ..
என் வானம்..
லோகு ஏன் இத்தனை சோகம்
ஆம் பெண்ணே..
கரைவது என் வாழ்க்கையானாலும்..
நிறைவது உன் மனமாக இருக்க வேண்டும்.
- இப்படிக்கு..
மறுபடியும்
கனவுகளை
தொலைத்தவன்.
நிஜமான அன்பு
really fantastic logu
\\gayathri said...
me they 1st pa
innum padikkalala padichitu varen\\
mm.. vanga..
\\ தமிழரசி said...
எப்படிப்பா இப்படியெல்லாம் வெல்லாமாய் இனிக்கும் கவிதையில் கண்ணீர் வெள்ளமாய் தெரிகிறது...ம்ம்ம் கவிதைக்கு பொய் மட்டுமல்ல கண்ணீரும் அழகு தான்...எத்தனை அன்பு ஆத்மார்த்தமாய் ஆழமாய்.....கனவுகள் தொலையவில்லை தொலைதூரத்தில் இருக்கிறது....கனவு மெய்ப்படும் காரியம் கைக்கூடும்....சோகமாய் இருந்தாலும் சுவையாய் இனிக்கிறது இந்த காதல் கவி....\\
Ungala mathiri engaluku eluthavum theriyathu..
comment podavum therilanga..
eppadiyo..
nallarukkulla ok..ok..ok..
\\ அபுஅஃப்ஸர் said...
நினைவுகளையும் நிஜங்களாய் பாவிப்பது இயல்பான வாழ்க்கை, அருமை சொல்லிருக்கீர்ன்க்க லோகு
வாழ்த்துக்கள்\\
Nanringa boss..
\\ நட்புடன் ஜமால் said...
\\அதற்காக உன் நிஜங்களை
திருடிக்கொள்ள விருப்பமில்லை எனக்கு..
ஆம் பெண்ணே..
கரைவது என் வாழ்க்கையானாலும்..
நிறைவது உன் மனமாக இருக்க வேண்டும்.\\
மிகவும் அருமை லோகு!
இயல்பான விடயத்தை
இயல்பாக எடுத்து கொண்ட பாங்கு நலம், ஆரோக்கியம்.
உண்மையில் நாம் யார் மீது அன்பு வைத்துள்ளோமோ அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதே அந்த அன்பின் அடிப்படை.
அவர்கள் எங்கிருந்தாலும் சரியே\\
mm unmaithannaa..
correcta sonneenga..
\\
சோலை நான்..
சுகந்தம் நீ..
நீ மட்டுமே நிரம்பியிருக்க
வேண்டிய என் வெளியெங்கும்..
வெம்மையாய் என் ஏக்கங்கள் மட்டுமே..
ஏக்கத்தின் வெளிப்பாடு வார்த்தையாய்\\
mmm..
kandupiduchuteengala..
\\ sakthi said...
தினம் காலை வந்து
மாலை மறைய
என் உலகின் சூரியனல்ல நீ ..
என் வானம்..
லோகு ஏன் இத்தனை சோகம்\\
Chummmanga..
\\ sakthi said...
ஆம் பெண்ணே..
கரைவது என் வாழ்க்கையானாலும்..
நிறைவது உன் மனமாக இருக்க வேண்டும்.
- இப்படிக்கு..
மறுபடியும்
கனவுகளை
தொலைத்தவன்.
நிஜமான அன்பு
really fantastic logu\\
Thanks sakthi..
innum ennai marakkama vanthu
parthatharku..
யாருடைய ஓட்டும் தங்களுக்குத் தேவையில்லை.
யாருடைய பின்னூடமும் தேவையில்லை.
படைப்பின் வலிமையை மட்டும் நம்பும்
“வாரம்” இணைய இதழ்(லிங்க் க்ளிக்கி இதழைப் படிக்கவும்)
வெளிவந்துவிட்டது. தங்கள் ஆதரவைத் தாரீர்!!!
நல்லாயிருக்கு.
கண்ணீர் கலந்த வரிகள்... அருமை... நெஞ்சை நெகிழச் செய்யும் வரிகள்... தொடருங்கள்...
நல்லாருக்கே!!!
Post a Comment