Jan 27, 2011

முட்டகண்ணு முழியழகி

கவனிப்பதற்கு பதிலாக
சந்தேகம்தான் வருகிறது..
வானம் எப்போது வெள்ளை நிறமாகி
நிலவு எப்போது கருமை நிறம் ஆனதென்று.
அட முட்டகண்ணு முழியழகி
கோலிகுண்டு கண்ணை உருட்டி உருட்டி
பேசாதே இனி என்னிடம்.
***************************************
தொடாமலேயே சிணுங்கும்
வெட்கச் சிணுங்கியாக இருக்கிறாயே..
வெட்க்கப்படாமல் வா..
வெயில் படாத இடங்கள்
காதலுக்கு ரொம்ப பிடிக்குமாம்.
**************************************
மொழிகளை விட
மௌனங்கள்தான் காதலை
அழுத்தமாய் பதிய வைக்கும் என்றால்
நம்ப மறுக்கிறாய்.
கட்டியணைத்து ஒரு முத்தம்
தந்து பார் புரியும்.
***************************************
நாளைக்கு நான் ஊருக்கு போகணும்.
இன்னிக்கு டிக்கெட் புக் பண்ணனும் என்றாய்.
சட்டென்று கேட்க தோன்றியது எனக்கு.
பூக்கூடைக்கெல்லாம் டிக்கெட்
புக் பண்ணனுமா என்ன?
************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

17 comments:

karthikkumar said...

பூக்கூடைக்கெல்லாம் டிக்கெட்
புக் பண்ணனுமா என்ன//
அருமை வரிகள்... :)

karthikkumar said...

கோலிகுண்டு கண்ணை உருட்டி உருட்டி
பேசாதே இனி என்னிடம்///
இதுவும்கூட :))

ரேவா said...

மொழிகளை விட
மௌனங்கள்தான் காதலை
அழுத்தமாய் பதிய வைக்கும் என்றால்
நம்ப மறுக்கிறாய்.

வரிகள்.அருமை.. :)

எவனோ ஒருவன் said...

////கவனிப்பதற்கு பதிலாக
சந்தேகம்தான் வருகிறது..
வானம் எப்போது வெள்ளை நிறமாகி
நிலவு எப்போது கருமை நிறம் ஆனதென்று.
அட முட்டகண்ணு முழியழகி
கோலிகுண்டு கண்ணை உருட்டி உருட்டி
பேசாதே இனி என்னிடம்.////

ரொம்ப சூப்பரா இருக்கு :-)

logu.. said...

\\ karthikkumar said...
பூக்கூடைக்கெல்லாம் டிக்கெட்
புக் பண்ணனுமா என்ன//
அருமை வரிகள்... :)\\

Vaanga bossu..
hihi.. nijamave nallarukka?

logu.. said...

\\ ரேவா said...
மொழிகளை விட
மௌனங்கள்தான் காதலை
அழுத்தமாய் பதிய வைக்கும் என்றால்
நம்ப மறுக்கிறாய்.

வரிகள்.அருமை.. :)\\

Nanringa Reva..

logu.. said...

\\ எவனோ ஒருவன் said...
ரொம்ப சூப்பரா இருக்கு :-)\\

Ha..ha.. neenga evano oruvan illanga..
nammaluthan.

nanringa.

Harini Resh said...

//நாளைக்கு நான் ஊருக்கு போகணும்.
இன்னிக்கு டிக்கெட் புக் பண்ணனும் என்றாய்.
சட்டென்று கேட்க தோன்றியது எனக்கு.
பூக்கூடைக்கெல்லாம் டிக்கெட்
புக் பண்ணனுமா என்ன//

hm Supper :)

gayathri said...

தொடாமலேயே சிணுங்கும் வெட்கச் சிணுங்கியாக இருக்கிறாயே..வெட்க்கப்படாமல் வா..வெயில் படாத இடங்கள் காதலுக்கு ரொம்ப பிடிக்குமாம்.


ennaga logu romantic kavitai ellam ezuthurega

nalla irku

Anonymous said...

இரண்டாவது கவிதையும் கடைசி கவிதையும் சூப்பர் லோகு

Anonymous said...

gayathri said...

தொடாமலேயே சிணுங்கும் வெட்கச் சிணுங்கியாக இருக்கிறாயே..வெட்க்கப்படாமல் வா..வெயில் படாத இடங்கள் காதலுக்கு ரொம்ப பிடிக்குமாம்.


ennaga logu romantic kavitai ellam ezuthurega

nalla irku

ஏம்மா அவர் புலம்பாமல் இருப்பது உனக்கு பிடிக்கலையா..இப்பத்தான் அவர் பதிவு பூக்களை சுமந்த சோலையாய் இருக்கு..

சுசி said...

காதல்?? காதல்!!

Anonymous said...

//மொழிகளை விட
மௌனங்கள்தான் காதலை
அழுத்தமாய் பதிய வைக்கும்//


ரொம்ப அனுபவிச்சு எழுதியிருக்கீங்க போல... ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

"மொழிகளை விட
மௌனங்கள்தான் காதலை
அழுத்தமாய் பதிய வைக்கும் என்றால்
நம்ப மறுக்கிறாய்"

வரிகள் அருமை.. கவியும் அருமை லோகு...

logu.. said...

Harininathan,
gayathri,
Tamil,
Indira,
Thozhi Prasha..

Nanringa.

logu.. said...

\\ஏம்மா அவர் புலம்பாமல் இருப்பது உனக்கு பிடிக்கலையா..இப்பத்தான் அவர் பதிவு பூக்களை சுமந்த சோலையாய் இருக்கு..\\

Solaiya munna pinna kannula pathirukeengala?

ஹேமா said...

எனக்கு இப்பல்லாம் உங்க கவிதை பாத்துப் பொறாமை.யாரோ கொடுத்து வச்ச அதிஷ்டக்காரியான காதலி உங்களுக்கு !