Oct 29, 2010

ஹய்யோ.. முத்தம்.

யாருமே இல்லாதபோது
முத்தம் கேட்டால்
பழிப்பு காட்டுகிறாய்..
எல்லோரும் இருக்கும்போது
ரகசியம் சொல்கிறேனென்று
காதில் சொல்லாமல்
கன்னத்தில் சொல்கிறாயே..
நீ திருட்டு சிறுக்கியா..
முரட்டு ராட்சசியா.
நான் ஐந்தாறு கேட்க
நீயோ ஒன்ன்றே ஒன்றுதான்
என்கிறாய்.
சரி.. உனக்கும் இல்லை..
எனக்கும் இல்லை..
மூன்றாக வைத்துகொள்வோம்.
ஆனால் ஒவ்வொரு முத்தமும்
குறைந்தபட்சம்
அரை மணி நேரமாவது
தர வேண்டும்.
சரியாடி செல்லம்மா.
இனிமேல் கைவிரல்களில்
நகம் வளர்க்காதே என்றாய்.
'ஏன் அழுக்கு பிடிக்குமா'
என கேட்க
இல்லை..எனக்கு காயங்கள்
படுமே என்கிறாய்.
சரி.. வெட்டிகொள்கிறேன்.
ஆனாலும் ஒரு சந்தேகமடி..
நகங்களால் மட்டும்தான்
காயங்கள் செய்ய முடியுமா என்ன?
...............................................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Oct 26, 2010

ரசித்து விளையாடும் பொம்மை..

உனக்கும் எனக்குமான
அறிமுகங்கள் இயல்பாய் இருந்தன..
நமக்கான நிமிடங்களும்
மிக இயல்பாய் கரைந்தன..
நம்மிடையேயான கோபங்கள் கூட
மிக மிக இயல்பாய்தான்..
நம்மிடையேயான பிரிவுகள் மட்டும்
நெருடுகின்றன நெஞ்சை.
புன்னைகைக்கும் பூக்களிளெல்லாம்
உன் முகம் பார்க்கிறேனோ என்றால்
இல்லை என்றுதான் சொல்வேன்..
ஆனால் உன் ஒவ்வொரு புன்னகையிலும்
பூக்களோடு வாசங்களும்
சேர்ந்தனைக்கின்றன என்னை.

இனம் புரியாமல் இதயத்தில்
மிக ஆழமாய் வேர்விட்டிருக்கும்
நேசங்கள் நமக்கு மட்டுமேயான
மிகசிறந்த நேரங்களை செய்து தரும்.
அப்போது தன்னை மறந்து
ரசிக்கும் குழந்தையாய்
மாறியிருப்பாய் நீ.
நீ ரசித்து விளையாடும் பொம்மையாய்
மாறியிருப்பேன் நான்.

புன்னகைக்கும் பூக்களை
பார்க்கும்போதெல்லாம்
ஏனோ என்னையும் அறியாமல்
வந்து செல்கிறது..
உன் மனசின் ஞாபகம்.

காதல்..
மொழிகள் தாண்டிய ஒன்றல்லவா..
வார்த்தைகள் சொல்லாததை
விழிகள் சொல்லுமாம்.
விழிகள் சொல்லாததை
இதழ்கள் சொல்லுமாம்..
எப்படி என்று தெரிந்தால்
எனக்கும்தான் சொல்லி தாயேண்டி
உன் இதழ்களால்.
...........................................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.