Oct 26, 2010

ரசித்து விளையாடும் பொம்மை..

உனக்கும் எனக்குமான
அறிமுகங்கள் இயல்பாய் இருந்தன..
நமக்கான நிமிடங்களும்
மிக இயல்பாய் கரைந்தன..
நம்மிடையேயான கோபங்கள் கூட
மிக மிக இயல்பாய்தான்..
நம்மிடையேயான பிரிவுகள் மட்டும்
நெருடுகின்றன நெஞ்சை.
புன்னைகைக்கும் பூக்களிளெல்லாம்
உன் முகம் பார்க்கிறேனோ என்றால்
இல்லை என்றுதான் சொல்வேன்..
ஆனால் உன் ஒவ்வொரு புன்னகையிலும்
பூக்களோடு வாசங்களும்
சேர்ந்தனைக்கின்றன என்னை.

இனம் புரியாமல் இதயத்தில்
மிக ஆழமாய் வேர்விட்டிருக்கும்
நேசங்கள் நமக்கு மட்டுமேயான
மிகசிறந்த நேரங்களை செய்து தரும்.
அப்போது தன்னை மறந்து
ரசிக்கும் குழந்தையாய்
மாறியிருப்பாய் நீ.
நீ ரசித்து விளையாடும் பொம்மையாய்
மாறியிருப்பேன் நான்.

புன்னகைக்கும் பூக்களை
பார்க்கும்போதெல்லாம்
ஏனோ என்னையும் அறியாமல்
வந்து செல்கிறது..
உன் மனசின் ஞாபகம்.

காதல்..
மொழிகள் தாண்டிய ஒன்றல்லவா..
வார்த்தைகள் சொல்லாததை
விழிகள் சொல்லுமாம்.
விழிகள் சொல்லாததை
இதழ்கள் சொல்லுமாம்..
எப்படி என்று தெரிந்தால்
எனக்கும்தான் சொல்லி தாயேண்டி
உன் இதழ்களால்.
...........................................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.

10 comments:

தினேஷ்குமார் said...

//மொழிகள் தாண்டிய ஒன்றல்லவா..
வார்த்தைகள் சொல்லாததை
விழிகள் சொல்லுமாம்.
விழிகள் சொல்லாததை
இதழ்கள் சொல்லுமாம்..
எப்படி என்று தெரிந்தால்
எனக்கும்தான் சொல்லி தாயேண்டி
உன் இதழ்களால்//..........

ரசித்த வரிகள் நண்பரே கவிதை நன்றாக உள்ளது

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

எல்லா கவிதையும் நல்ல இருக்குங்க.. படமும் நல்லா இருக்கு :-))

///உனக்கும் எனக்குமான

அறிமுகங்கள் இயல்பாய் இருந்தன..
நமக்கான நிமிடங்களும்
மிக இயல்பாய் கரைந்தன..
நம்மிடையேயான கோபங்கள் கூட
மிக மிக இயல்பாய்தான்..
நம்மிடையேயான பிரிவுகள் மட்டும்
நெருடுகின்றன நெஞ்சை ////

பிரிவைப் பற்றி சொன்ன விதம் நல்லா இருக்கு.. :-))

sakthi said...

காதல்..
மொழிகள் தாண்டிய ஒன்றல்லவா..
வார்த்தைகள் சொல்லாததை
விழிகள் சொல்லுமாம்.
விழிகள் சொல்லாததை
இதழ்கள் சொல்லுமாம்..
எப்படி என்று தெரிந்தால்
எனக்கும்தான் சொல்லி தாயேண்டி
உன் இதழ்களால்.

சூப்பர்ப் லோகு!!

Kaya said...

ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு அழகா இருக்குங்க,

" உனக்கும் எனக்குமான
அறிமுகங்கள் இயல்பாய் இருந்தன..
நமக்கான நிமிடங்களும்
மிக இயல்பாய் கரைந்தன..
நம்மிடையேயான கோபங்கள் கூட
மிக மிக இயல்பாய்தான்..
நம்மிடையேயான பிரிவுகள் மட்டும்
நெருடுகின்றன நெஞ்சை"

அதிலும் இந்த "பிரிவு "ரொம்ப ரொம்ப நல்லாருக்கு.மனச தொட்டிருச்சுங்க.

logu.. said...

athukuthane nanbare..

nanringa dinesh.

logu.. said...

mmhhoomm.. pirivai patri solla
oru blog pathathunga..

etho nallaruntha sari.
nanringa ananthi.

logu.. said...

hi sakthikka..
ungaluku pidikathathu eathachum irunthathan athisayam.

logu.. said...

apdiye pudichu vachkonga kaya.
thanks.

ஹேமா said...

காதலின் மொழியே முத்தம்தானே லோகு !

சிவகுமாரன் said...

கவிதைகளும் அதற்கான படங்களும் மிகவும் அழகு.