Jan 4, 2010

வெறுமை..

ஈரமில்லா இடத்தில்
செடிகள் நட்டு
ரசசனைகளை புதைத்து
பூக்கள் வளர்க்க
ஆசைப்படுவதை போல்தான்
இதயத்தை தொலைத்து
இருட்டினில் வாழும் உன்னிடம்
அன்பையும் நேசத்தையும்
யாசிக்கிறேன் நான்..

யாராலும் எட்ட முடியா
அடர்ந்த தனிமைகளில்
பயணம் செய்ய போகிறேன் இனி..
அங்கே உன் உயிரை கொள்ளும்
பிரியங்களும் ..
நெஞ்சம் வதைக்கும்
நேசங்களும் துணை வரப்போவதில்லை.
வழித்துணையாக வரப்போவதெல்லாம்
ஆழ் மனதின் வெறுமைகளும்..
சிற்சில கவிதைகளும்தான்.

மற்றவரை துன்புறுத்தும்
விருப்பங்கள் வேண்டாம்..
நம்மை வஞ்சிக்கும்
இலக்குகள் வேண்டாம்..
போகின்ற போக்கில்
வாழ்ந்து பார்க்கிறேன்
வாழ்க்கையை..

வாழ்க்கையின் ஆதாரமே
கொஞ்சம் நம்பிக்கையும்..
நிறைய்ய நேசமும்தான் ..
உணர்ந்திருந்தும்
வெறுமையை விரும்பும்
நானும் ஒரு மனிதன்தான்.
.................................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.

3 comments:

நட்புடன் ஜமால் said...

யாசித்து எதையும் பெற இயலாது.
------------

வழித்துணையாக வரப்போவதெல்லாம்
ஆழ் மனதின் வெறுமைகளும்..
சிற்சில கவிதைகளும்தான்.]]

நல்லாயிருக்கு.

--------------------

வாழ்க்கையின் ஆதாரமே
கொஞ்சம் நம்பிக்கையும்..
நிறைய்ய நேசமும்தான்]]

நிதர்சணம்.

gayathri said...

மற்றவரை துன்புறுத்தும்
விருப்பங்கள் வேண்டாம்..
நம்மை வஞ்சிக்கும்
இலக்குகள் வேண்டாம்..
போகின்ற போக்கில்
வாழ்ந்து பார்க்கிறேன்
வாழ்க்கையை..

nalla iruku

kavitha said...

யாராலும் எட்ட முடியா
அடர்ந்த தனிமைகளில்
பயணம் செய்ய போகிறேன் இனி.

அருமை ..அருமை... அருமை... வேறென்ன ? சொல்ல வார்த்தைகள் இல்லை லோகு...


போகின்ற போக்கில்
வாழ்ந்து பார்க்கிறேன்
வாழ்க்கையை.



படிச்சி பார்த்தியா லோகு நீ ??... அப்பா கோடானு கோடி அர்த்தங்கள். அற்புதம்