Dec 13, 2009

வாழ்ந்து பார்க்கிறேனே..

இலக்குகளற்ற பயணத்திலிருந்தேன்..
இலக்காய் உன்னை நினைக்க செய்தாய்..
நினைத்து நினைத்து நெருங்கி
வரும்போதுதான் நெருப்பென
சுடுகிறது உண்மை..
உனக்கான இலக்கு நான் மட்டுமே அல்ல..

வார்த்தை என்றால் அது
இதழிலிருந்து அல்ல..
இதயத்திலிருந்து வரவேண்டும்..
புன்னகை என்றால் அது
இதயத்தை நிறைக்கவோ. .
அல்லது கரைக்கவோ..
காயங்கள் செய்யகூடாது.
உன் வார்த்தைக்கும்..
புன்னகைக்கும் இனி
சாத்தியமே இல்லை என தோன்றுகிறது.

நீண்ட நெடிய ஆங்காரமான
இரவுகளிலெல்லாம் அனலில்
பட்ட புழுவாய் துடிதுடித்து
பெரும் போராட்டத்திற்கு பின்
பேரமைதியாகும்போதே உணர்ந்து கொண்டேன்.
என் மனம் உன்னை விட்டு
விலக ஆரம்பிக்கிறதென்று.

இனி நான் கண்டு ரசிக்க
எதுவுமே தட்டுபடபோவதில்லை
என் கண்களுக்கு.
இனி நான் பேசி மகிழ
எந்த இரவுமே வாய்க்கபோவதில்லை
என் ப்ப்ரியங்களுக்கு.

பரவாயில்லை..
மீண்டுமொருமுறை
வாழ்ந்துதான் பார்க்கிறேனே..
ஆசைகளற்ற இயந்திரமாய் வாழ்க்கையோடும்..
வலிகளை மட்டுமே தரும் கொடிய தனிமையோடும்.
..........................................................................

ப்ரியமுடன்.
லோகநாதன் .

3 comments:

து. பவனேஸ்வரி said...

வாழ்க்கை என்பது வாழ்வதற்காகத் தானே?? வாழ்ந்துதான் பார்ப்போமே...

நட்புடன் ஜமால் said...

நினைத்து நினைத்து நெருங்கும் முன்பே தெளிவா சொல்லியிருக்கனும்

இருப்பினும் இதுமட்டுமா வாழ்க்கை - இன்னும் எவ்வளவோ இருக்கு ...

kavitha said...

ஐயோ முடீல ோகு அவ்ளோ அழகு, அவ்ளோ ரசனை, இனிப்பா இருந்த எடுத்து சாப்டு இருப்பேன் ஆசையா , மனுசனா இருந்த கட்டி பிடிச்சிருப்பேன் இல்ல கால்ல விழுந்திருப்பேன் , இது வார்த்தையா இருக்கே ?. வருத்தமா இருக்கு ?. என்ன சொல்றது. அவ்ளோ ரசிச்சு படிச்சேன், நீ இன்னொரு முறை படி ரொம்ப பிடிச்சிருக்கு இந்த கவிதை