Apr 22, 2009

மறவாதே கண்மணியே..

கனவினில் பார்த்தேன்
காணவில்லை வேர்த்தேன்..
இரவுகள் கூட
கானலாய் ஆனதடி பெண்ணே..
நிஜங்களை மறந்து
நினைவுகளில் தொலைந்தேன்..
நிகழ்வுகள் மறந்து
சுயங்கள் தொலைக்கிறேன் அன்பே..
என் விடியல்களை எல்லாம்
கோடி சூரியன்களை கொண்டு
பிரகாசிக்க செய்தாய்..
உன் காலை வணக்கங்களால்..
என் இரவுகளை எல்லாம்
ஒரு நூறு நிலவுகளை கொண்டு
அழகுற செய்தாய்
உன் இரவு வணக்கங்களால்..
இன்னொரு தாயாய்
நெஞ்சினில் நிறைந்தாய்..
பெண்ணொரு தேவதை
மனதோடு உணர்த்தினாய் ..
காயங்கள் மட்டும் ஏனோ
தந்தாய் அன்பே..
என்கவிதை கூட
கலங்குது பெண்ணே..
காயங்கள் மட்டுமே
தந்தாலும்..
கண்ணீரில் எனை
நனைய வைத்தாலும்
என் காலங்கள் உள்ள
காலம்வரை
என் நெஞ்சம் உன்னை
மறவாதே கண்மணியே.
....................................................

7 comments:

gayathri said...

me they 1st

just wait pa kavithia padichitu vanthu comment podren ok

gayathri said...

matravar yarukkum puriyamal samantha pattavarukku mattume purivathu than kavithai

nalla iruku pa

gayathri said...

கண்ணீரில் எனை
நனைய வைத்தாலும்
என் காலங்கள் உள்ள
காலம்வரை
என் நெஞ்சம் உன்னை
மறவாதே கண்மணியே.

eaan pa

வியா (Viyaa) said...

nice poem..
alagana varigal

Anonymous said...

எத்தனை அழகாய் நேசிக்கிறாய்
எப்படியெல்லாம் யோசிக்கிறாய்
அவளை சுவாசமாய் சுவாசிக்கிறாய்
இப்படி எல்லாம் வாசிக்கிறாய்
கண்ணில் நீரை சுமந்து கொண்டு காதலை மனதில் ஏந்திக்கொண்டு கவிதையில் நாளும் உன் அரங்கேற்றம்

logu.. said...

Comments kodutha anivarukkum
nanringa

kavitha said...

கனவினில் பார்த்தேன்
காணவில்லை வேர்த்தேன்
இரவுகள் கூட கானலாய்

nan rusitha varigal