Dec 23, 2008

அம்மாடீ..

கைகளில்
முத்தமிடுதலை
கண்டுபிடித்தவ(ளை)னை
கட்டி வைத்து
உதைக்க
தோன்றுகிறது எனக்கு.
...................................
உன்னருகே
இருக்கும்
நேரங்களில் எல்லாம்
முத்தவியலை
முழுதாய்
கற்றுக்கொள்ள
ஆசைப்படுகிறேன் நான்.
ஒருமுறைகூட
முழுதாய்
கற்றுக்கொள்ள
விடுவதேயில்லை..
உன் வெட்கவியல்.
.........................................
"ஹாய்.. செல்லம்ஸ்"
"................."
"என்ன பேசமாட்டியா.."
"நான் வந்து ஒரு மணி நேரமாச்சு.."
"சாரிடா.. கொஞ்சம் லேட் ஆய்டுச்சு.."
"இதுதான் கடைசீ..
இனிமேல் நீ எங்கே
கூப்ட்டாலும் வரமாட்டேன்.."
" ஒ.கே ..ஒ.கே..
நான் ஒன்னு
சொல்றேன் கேட்பாயா.."
"சொல்லி தொலை.."
"இனிமேல்
அந்தி வானிற்கும்..
அழகு வானவில்லிற்க்கும்..
உன் வெட்க்க வர்ணங்களை
கடனாக தராதே.."
"கிறுக்கனாடா நீ.."
கிறுக்கியாடீ நீ.."
"ஏய்....!"
"உஷ்ஷ்..
இந்த கிறுக்கன காதலிக்கிற
நீ கிறுக்கியாத்தான இருப்ப.."
"சீ.. போடா.."
அம்மாடீ..
எப்படி முடிகிறது
உன்னால் மட்டும்..
நிமிடங்களில் கோபங்களை கொட்டவும்..
மறு நிமிடங்களில் காதலை கொட்டவும்.
..........................................................
"ஹாய்டா.."
"ஹாய்.."
"எப்போ வந்த?
"நான் வந்து
ஒரு மணி நேரமாச்சு.."
"உனக்கு கோபமே வராதாடா.."
"உன்னை பார்த்தாலே
மனசு பனியாகிவிடுகிறது..
கோபத்திற்கு நான் எங்கே போக.."
"ம்ம்ம்.. நாளைக்கு
எனக்கு பர்த்டேடா.."
"ம்ம்ம்.. இருக்கட்டும்.."
"உனக்கு கொண்டாட
தோணலியா.."
"ஐயோ.. மண்டு..
உன்ன பாக்கும்போதெல்லாம்
எனக்கு நீ புதுசா பிறந்து
வருவதை போல்தான் இருக்கு..
இதில் எந்த நாளை
உன் பிறந்த நாளென்று நான் கொண்டாட.."
"சும்மா.. கதை பேசாதே.."
"சரி.. உனக்கு ஏதாவது
ஆசை இருந்தால் சொல்..
நாளைக்கு செய்றேன்.."
"அப்படீல்லாம் ஒண்ணுமில்ல.."
"எதாச்சும் கேளு.."
"கேக்கட்டுமா.."
"ம்ம்ம்.."
"தினம் காலை விடிந்ததும்
உன் முகத்தில் விழிக்கும்
உன் வீட்டு தோட்டத்தின்
அதிர்ஷ்டமான பூக்களில்
ஒன்றாக பூக்கணும் நான்.."
அய்யோடீ..
இந்த காதலிகளுக்கு
இந்த மாதிரி ஆசைகளெல்லாம்
எப்படி வருகிறது..
.........................................................
ப் ரி ய மு ட ன் . .
லோ க நா த ன் . .

Dec 21, 2008

கடைசியாய்..


கவிதையாய்
வாசம் செய்ய
தவிக்கிறது
என் காதல்..
உன் ப்ரியங்கள்தான்
இல்லை இங்கே..

பூக்களாய்
தவமிருக்கிறது
என் காதல்..
தென்றலாய்
உன் வருகைகள்தான்
இல்லை இங்கே..

சட்டென்று தோன்றி
சட்டென்று மறையும்
வானவில்லை போல்தான்
நமக்கான நேரங்களும்..
எதிர்பாராமல் தோன்றி
எதிர்பாராமல் முடிந்துவிட்டன..
என் கைகளை
பிடித்து உணர்த்த
வாய்ப்பில்லைதான் உனக்கு..
என் கண்களை பார்த்து
சொல்லும் வாய்ப்பும்
இல்லைதான் உனக்கு..
என்றாலும்..
எப்படியேனும் எனக்கு
உணர்த்தியிருக்கலாம் நீ..
இதுதான் நம்
கடைசி சந்திப்பென்று..
இன்னும் கொஞ்சம்
ஆழமாக உன் வார்த்தைகளை
தேக்கி வைத்திருக்கக்கூடும்
என் நெஞ்சம்.
.......................................................
ப் ரி ய மு ட ன் . .
லோ க நா த ன் . . .

Dec 16, 2008

வாழ்க்கை..

இப்போதெல்லாம்..
என் ஜன்னலில்
தென்றல் வருவதில்லை..
என் வாசலில்
கோலங்கள் இருப்பதில்லை..
என் தோட்டத்தில்
பூக்கள் மலர்வதில்லை..
என் உலகில்
வெளிச்சங்கள் இருப்பதில்லை..

என்றாலும் மிக மிக
பிடித்திருக்கிறது
இந்த வாழ்க்கை..

உன்னை எண்ணி
மண்ணில் வாழும்
வாழ்க்கை போதுமே..
ஜென்மம் ஏழும்
என் நெஞ்சம்
நிறைந்து வாழ்ந்திடுமே.
.........................................
இறைவா..
தெரிந்தோ.. தெரியாமலோ..
என்னை மனிதனாக படைத்து
எனக்கும் அவளுக்கும்
இடைவெளி வைத்துவிட்டாய்..

மீண்டும்
பிறப்பிருந்தால்..

அவள் எண்ணங்களாக..
அவள் அசைவுகளாக..
அவளில் வாழும்
வரம் வேண்டுமடா..
...........................................

ப் ரி ய மு ட ன் . .
லோ க நா த ன் . .



Dec 10, 2008

பொறாமை..

தினம் காலை நீ
கண்விழித்ததும்
நீ சோம்பல்
முறிக்கும் அழகை
கண்மூடாமல் பார்க்கும்
உன் வீட்டு கண்ணாடி ஜன்னலை
பார்க்க பொறாமையாக
இருக்கிறது எனக்கு.
.........................................
பூவை தாங்கும்
காம்பென..
தண்ணீர் குடம்
தாங்கி நீ நடந்து வர..
தழும்பி வழியும்
தண்ணீரை பார்க்க
பொறாமையாக
இருக்கிறது எனக்கு.
.............................................
நீ தூங்க ஆரம்பிக்கும்போது
சமர்த்தாய்
உன் கூந்தலோடு
உறவாடிக்கொண்டிருந்தாலும்..
நடு இரவில்
உன் நெஞ்சாங்குழியில்
தஞ்சமடைந்திருக்கும்
தலையணையை
பார்க்க பார்க்க
பொறாமையாக
இருக்கிறது எனக்கு.
.............................................
சின்ன குழந்தைதான்
என்றாலும்..
நீ ஒரே ஒரு
முத்தம் கொடு என
கொஞ்சும்போது..
வேறென்ன...
பொறாமைதான் எனக்கு.
........................................
எங்கேனும்
அருவியை பார்க்க..
உன் புன்னகையை
கடன் வாங்கியிருக்குமோ என
பொறாமையாக
இருக்கிறது எனக்கு.
............................................
ப் ரி ய மு ட ன் . . லோ க நா த ன். .

Dec 8, 2008

கண்மணிக்கு..

என் கனவுக்கும்
இல்லை கால்கள்..
உன்னிடம் ஓடிவர..
என் நினைவுக்கும்
இல்லை நிஜங்கள்..
உன்னை சேர்ந்துவிட..
காலம்காலமாய்
காதலின் சாபக்கேடு
இந்த பிரிவுகள்..
என்றாலும் பரவாயில்லை..
முட்கள் இல்லாத ரோஜாக்கள்
அழகாய் இருப்பதுமில்லை..
வேதனை இல்லாத காதல்
சுகமாய் இனிப்பதுமில்லை.
..........................................................
பாசம் என்ன.. நேசம் என்ன..
எல்லாம் வேஷம்தானடி..
உண்மை ஏது.. உணர்ச்சி ஏது..
உலகம் ஊமைதானடி..

ஆசை வைத்து மாலை செய்தேன்
அது சேரவில்லை உந்தன் சன்னதிதான்..
கட்டாந்தரை.. கல்லறை போர்வை..
அது எந்தன் நெஞ்சுக்கு நிம்மதிதான்..

ஜோடி சேர ஆசையுண்டு
சொந்தம் என்று நீ பக்கமில்லை..
வாழ்ந்து பார்க்க வாழ்க்கை உண்டு
சேர்ந்து வாழ ஒரு வாழ்க்கை இல்லையே..

கட்டம் போட்டு முடிக்கும் முன்பே
கணக்கை முடித்தது யார் செய்த தவறு..
வட்டம் ஒன்று போட்டு வைத்து அதில்
வாழ்க்கையை வைத்தவன் செய்த தவறுதானடி.
.................................................................
ப் ரி ய மு ட ன் . . லோ க நா த ன். .

Dec 6, 2008

தன் பெருமை தானறியாதவள்..

கோடானு கோடி
கவிதைகளை
உன்னுள் வைத்துக்கொண்டு
தினம் ஒன்றாக
எனக்கு தந்து..

கோடானு கோடி
ஆசைகளால்
நிறையாத என் நெஞ்சை
உன் சிறு புன்னகையால்
நிறைத்து..

தவறி விழுந்த
கைக்குட்டையை
எடுக்கும் போது
என் நெஞ்சையும் சேர்த்து
அள்ளிக்கொண்டு..

என்னுயிரை
ஒரு போர்க்களமாக்கி விட்டு
ஏதும் அறியாதவள் போல
எனை கடந்து செல்கிறாய்..

தன் பெருமை
தானறியாதவள்தான்
நீ.
......................................
ப் ரி ய மு ட ன் . .
லோ க நா த ன் . .

Dec 4, 2008

தனிமை..

"கடைக்கு வரியா.."
"தலை வலிக்குது.. வரலை.."
நட்புக்கு பொய் சொல்லி
மனதுக்கு பழகிவிட்டது..
"ஏன்டா லேட்டு?"
"ஒண்ணுமில்லம்மா.."
கால் போன போக்கில்
என் நேரங்களும்
போக தொடங்கிவிட்டன.

"வாடா சாப்டலாம்.."
"நான் சாப்ட்டாச்சு.."
சொந்தங்கள் ஆயிரம்
இருந்தும் தனிமையை
உணரும் மனசு.

இப்போதெல்லாம்
தனிமைதான் எனக்கு
தாய் போல..
உன் நினைவுகளால்
தாலாட்டிகொண்டே இருக்கிறது.
............................................................
காதலில் தனிமையும்
ஒரு சுகம்தான்..
பலர் சொல்ல கேட்டதுண்டு..
ஆனால் நான் காதலித்து
இத்தனை நாட்களாகியும்
எனக்கு தனிமை கிடைக்கவேயில்லை..
நிஜமாகவோ.. நினைவாகவோ..
என்னருகே நீயிருக்க
தனிமைக்கு நான் எங்கே போவேன்.
........................................................

Ppriyamudan..

லோ க நா த ன் . .

Dec 2, 2008

சிதறல்கள்..

நல்ல மலரோடு
வாசமாய் கட்டிக்கொள்ள
மயக்கம்தானடி..
முழு இரவோடு
கவிதையாய் ஒட்டிக்கொள்ள
தயக்கம் ஏனடி..
..............................................
நல்ல மலரோடு
வண்டாடும் வாசம்..
என் நினைவோடு
திண்டாடும் உன் நேசம்..
..............................................
உன் கொலுசுகள்
விட்டு செல்லும்
சத்தங்கள்..
என் ஜீவன்
வருடி போகும்
முத்தங்கள்..
..................................
உன் பாதம்
அசைந்தாடும்
கொலுசுகள்..
என் நெஞ்சில்
நின்றாடும்
ஸ்வரங்கள்..
......................................
ஒரு நிலவை
போல்தான் நீயும்..
நிஜங்களால் தேய்ந்து
நினைவுகளால் வளர்கிறாய்..
ஏனடி இந்த
விளையாட்டு..
போதுமடி என்னை
தாலாட்டு..
........................................
ஒரு சின்ன சிணுங்களில்..
ஒரு சின்ன புன்னகையில்..
ஒரு செல்ல சண்டையில்..
எங்கே கற்றுக்கொண்டாய் நீ..
என்னை வேரோடு சாய்க்க.
................................................
நீ கவிதைதான் எனக்கு..
அதனால்தான்
என் நெஞ்சோடு
எப்போதும் இனிமையாய்
இருக்கிறாய்..
..................................................
நான் ரசிகன்தான் உனக்கு..
அதனால்தான்
நான் விரும்பும்
சிலவற்றிலும் முதலாய்
இருக்கிறாய்..
.................................................
என் புத்தகம் கூட
பூ வாசம் வீசுதடி..
உன் பெயரெழுதி பார்க்கையில்..
................................................
கனவாகி உந்தன்
நினைவாகி
உயிராகி உந்தன்
உணர்வாகி
ஒரு முத்தம் வைக்க
சத்தம் போடுமோ..
உந்தன் பெண்மை
எட்ட நின்று
ஏக்கம் தருமோ..
..........................................
தேவதை..
இதுவரை மற்றவர்
சொல்ல கேட்டதோடு சரி..
ஒருமுறைகூட நேரில்
பார்த்ததில்லை..
ஆனாலும் அவ்வார்த்தை
கேட்கும்போதெல்லாம்
நினைவுக்கு வருவது
நீ மட்டும்தான்.
.............................................

ப் ரி ய மு ட ன் . . லோ க நா த ன். .

காதலன் நான்..

இப்போதெல்லாம் நீ
என் மடியோடு
சாயும் நேரங்களை விட
என் மனதோடு
சாயும் நேரங்கள்தான்
அதிகம் என்கிறாய்.
அதற்காக உன்
மடியை குறைபட்டுகொள்ளாதே..
அது என் காதல்
இளைப்பாறும் நந்தவனம்.
.......................................................
பூக்கள் மாநாடு
போடும் வேளையில்
பூந்தோட்டத்திற்கு போகாதே
என்றால் கேட்கிறாயா நீ..
இப்போது பார்
அவை தங்களுக்குள்
யார் அழகு என்கிற
சண்டையை நிறுத்திவிட்டு
உன்னை பார்த்துக்கொண்டிருகின்றன.
..................................................
" இனிமேல் ரோஜாவை
மட்டும் நீ சூடிக்கொண்டு
வராதே..
மற்ற பூக்கள்
எல்லாம் என்னிடம்
தினமும் முறையிடுகின்றன.."
"பூக்கள்.."
" ம்ம்.."
"உன்கிட்ட.."
"ஆமாண்டீ.."
"நான் நம்பணுமாக்கும்.."
" ஏன் நம்பமாட்டியா..
பூக்களின் ராணி நீயே
என்னிடம் பேசும்போது
பூக்கள் என்னிடம்
பேசாதா என்ன?"
....................................................
" டேய்.. ஒரு கவிதை சொல்றா.."
" இங்க பார்ரா..
ஒரு கவிதை..
கவிதை கேக்குது.."
" சும்மா மழுப்பாதடா.."
"சரி.. எனக்கு
கவிதை எல்லாம்
தெரியாது..
வேணுன்னா எனக்கு புடிச்ச
பூ என்னன்னு சொல்றேன் கேட்டுக்க.."
" இது எனக்கு தெரியாதா..
ரோஜாதானே.."
" இல்ல.. உன் மனசு.."
..................................................
" டேய்.. அந்த கடைல
இருக்குற ரோஜாவை பாரேன்..
எவ்வளவு அழகா இருக்கு.."
"உன் சிரிப்பு கூட அழகாத்தான் இருக்கு.."
"இந்த உலகம் ரொம்ப பெருசில்ல.."
"உன் மனசை விடவா..?"
"சீ.. போடா.. உனக்கு வேற எதுவுமே தெரியாதா.."
"ம்.. உன்னை தவிர வேறு எதையுமே
ரசிக்கவோ.. நேசிக்கவோ..
தெரியாது எனக்கு".
......................................

ப் ரி ய மு ட ன். .
லோ க நா த ன். .